கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின் போன்று இளம் வீரர்கள் பலரும் சாதனை படைத்து வரும் நிலையில், பிரபல வீரர் புஜாராவும் புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
வங்கதேச அணியுடனான டெஸ்ட்டில் இடம்பெறாத நிலையில் தற்போது நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. வருகிறது.
இந்த நிலையில் டான் பிராட்மேன், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் நிகழ்ச்சி ஜாம்பாவான்களாக இருக்கும் நிலையில் அவர்களை முன்னோடியாக வைத்து பல இளம் வீரர்கள் அவர்களின் சாதனைகளை நெருங்கி வருகின்றனர்.
முதல்தர கிரிக்கெட்டில் புஜாரா சாதனை
அந்த வகையில் சமீபத்தில் விராட் கோலி சச்சினின் உலக சாதனையை முறியடித்தார். இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்களை அடித்து சாதனை படைத்துள்ளார். சத்தீஸ்கர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய புஜாரா தனது 66வது சதத்தை நிறைவு செய்தார்.
இதுவரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பும்ரா அதில் 19 சதங்களும், 35 அரை சதங்களும் அடித்து, 7125 ரன்கள் அடித்துள்ளார். உலகின் முன்னணி அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தொடர்ந்து 2 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வெல்லவும் புஜாரா காரணமாக இருந்தார். எனவே அவரது பேட்டிங் திறமை எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது. இருப்பினும் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தனது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப புஜாரா தீவிர முயற்சி எடுத்து வருகிறார். அதன்படி, கிடைக்கும் நேரத்தில் உள்ளூர் போட்டியிகளில் விளையாடி திறமையை மெருகேற்றி வருகிறார். சத்திஸ்கர் அணியுடன் செளராஷ்டிரா அணி மோதி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சத்திஸ்கர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 578 ரன்கள் எடுத்தது.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய செளராஷ்டிர அணி 13 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்தாலும், புஜாரா பொறுப்பாக விளையாடி 236 பந்துகளில் 14 பவுண்டரி உள்ளிட்ட 138 ரன்கள் அடித்தார். எனவே முதல்தர கிரிக்கெட் போட்டியில் புஜாரா தனது 66வது சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். இதில், சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் இருவரும் தலா 81 சதங்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர். ராகுல் டிராவிட் 2 வது இடத்தில் இருக்கிறார்.
கவாஸ்கர், சச்சின் வரிசையில் இடம்பிடித்த புஜாரா
இப்போட்டியில் சதம் அடித்த புஜாரா முதல்தர கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.இதற்க்கு முன்னதாக சுனில் கவாஸ்கர் 25,834 ரன்களுடம் முதலிடமும், சச்சின் 25.396 ரன்களுடன் 2 வது இடத்திலும், ராகுல் டிராவிட் 23,794 ரன்களுடன் 3 வது இடத்திலும் உள்ளனர். தற்போது புஜாரா 21,016 ரன்களுடன் 4 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் மாதிரி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தலைசிறைந்த வீரர்களில் ஒருவராக புஜாரா இருக்கிறார் என பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். இனி வரும் காலத்தில் கவாஸ்கர், சச்சின் சாதனைகளை அவர் முறியடிப்பாரா என கேள்வி எழுந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இடம்பெற்று இன்னும் பல சாதனைகளை அவர் படைக்க வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் கூறு வருகின்றனர்.