வியாழக்கிழமை, அக்டோபர் 24, 2024

மேஜர் முகுந்தாக உருமாறி நிற்கும் சிவகார்த்திகேயன்.. மெய்சிலிர்க்க வைக்கும் அமரன் ட்ரெய்லர்

Amaran Trailer: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள அமரன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. கமல் தயாரித்துள்ள இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மெய்சிலிர்க்க வைப்பதோடு கண் கலங்கவும் வைத்திருக்கிறது. ஆரம்பத்திலேயே மேஜர் முகுந்த் தன் மகளுடன் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே என சேர்ந்த பாடுவதோடு தொடங்குகிறது.

ஒரிஜினல் முகுந்தின் இந்த காட்சியோடு சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தப்படுகிறார். அதை அடுத்து இந்திய ராணுவத்திற்காக மேஜர் முகுந்த் எந்த அளவுக்கு தன்னுடைய அர்ப்பணிப்பை கொடுத்தார் என்பது அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் விரிகிறது.

மெய்சிலிர்க்க வைக்கும் அமரன் ட்ரெய்லர்

இதில் சாய் பல்லவி உடன் காதல், குடும்பம் என அழகான காவியமும் ஒரு பக்கம் இருக்கிறது. அதே போல் மகன் இராணுவத்துக்கு செல்கிறான் என்றதும் இயல்பாக பெற்றவர்களுக்கு ஏற்படும் பயமும் பதட்டமும் அவர்களின் மனநிலையை புரிய வைக்கிறது.

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாக பயம் என்றால் என்ன என்று தெரியாமல் எதிரிகளை துவம்சம் செய்வது. இது தான் ராணுவத்தின் முகம் என தீவிரவாதிகளை பார்த்து கூறுவது என டிரைலர் முழுவதும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேபோல் தேசமே சல்யூட் அடித்த ஒரு வீரனின் தியாகத்தை திரை வடிவில் காணவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News