திங்கட்கிழமை, அக்டோபர் 28, 2024

முதல் தர போட்டிகளில் 6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர் அடித்த மூன்றே வீரர்கள்.. போங்கு பண்ணிய ரவி சாஸ்திரி

ரொம்ப காலமா ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸ் அடித்தது நான் தான் என மீசையை முறுக்கி கொண்டு இருந்தார் ரவி சாஸ்திரி. ஆனால் அது முதல் தரப்போட்டிகளில் அல்ல, டொமஸ்டிக் போட்டியில் அடித்து நீண்ட காலமாக அந்த ரெக்கார்டை வைத்திருந்தார். ஆனால் மூன்று வீரர்கள் இன்டர்நேஷனல் போட்டியில் அடித்து சாதித்துள்ளனர்.

ஹெர்செல் கிப்ஸ்: இவர்தான் இன்டர்நேஷனல் போட்டியில் முதல் முதலாக 6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸ் அடித்தவர், அதுவும் உலக கோப்பையில் 2007ஆம் ஆண்டு நெதர்லேண்டுக்கு எதிராக டேன் வாங் பங்கு என்ற பவுலர் வீசிய பந்தில் அடித்துள்ளார்.

யுவராஜ் சிங்: கிப்ஸ்க்கு அடுத்தபடியாக இந்த சாதனையை செய்தவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். 2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்தார். ஆபத்தான பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட்போர்டு ஓவரில் மட்டும் 36 ரன்கள் குவித்தார்.

கிரண் போலாட்: இலங்கை அணிக்கு எதிராக போலாட் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அகிலா தனஞ்செயா வீசிய பந்தில் ஆறு சிக்ஸர்கள் பறக்க விட்டார். அதற்கு முந்தைய ஓவரில் தான் தனஞ்செயா ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை செய்தார். இப்படி முதல் தரப் போட்டிகளில் அடித்தவர்கள் இவர்கள் மூவரும் தான்.

இவர்களை தவிர மூன்று வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர் அவர்கள் எல்லோரும் முதல் தரப் போட்டிகளில் அடிக்கவில்லை. டொமஸ்டிக் போட்டிகளில் ரவி சாஸ்திரி போல் தான் அடித்துள்ளனர். கேரி சோபர்ஸ், ருத்ராஜ், பெரேரா போன்ற வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் அடித்துள்ளனர்

- Advertisement -spot_img

Trending News