வெள்ளிக்கிழமை, நவம்பர் 1, 2024

ஆலமரத்தையே அழ வைத்த அமரன்.. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் தற்போது ‘‘அமரன்’’ படம் வெளியாகியுள்ளது.

மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

இந்த நிலையில் இன்று படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. மேலும் படத்தை பார்த்து முடித்த ரசிகர்கள் இது படம் அல்ல.. காவியம் என்று புகழ்ந்து வருகிறார்கள். இந்த ஒரு படத்தில், வீரம் காதல், தியாகம் என்று பல உணர்வுகளை உள்ளடக்கியுள்ளது.

ஆலமரத்தையே அழ வைத்த அமரன்..

இப்படி இருக்க, படத்தை தயாரித்த நடிகர் கமல் ஹாசனின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கடந்த 30-ஆம் தேதி இரவு படக்குழுவினருடன் அமரன் படத்தை கண்டுகளித்தார், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இருந்தனர்.

இந்த படத்தை பார்த்த மிகவும் இம்ப்ரெஸ் ஆகியுள்ளார் முதலமைச்சர். மேலும், படக்குழுவை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து இன்னும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர் கலைஞானி கமல் ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி-க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

படத்தை பார்த்து இறுதியில் கண்கலங்கி விட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்துள்ளார்கள்.

- Advertisement -spot_img

Trending News