சிவகார்த்தியேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி, புவன் அரோரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கெளரவ் வெங்கடேசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ்குமார் இசையமைத்துளார். சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் எடிட் செய்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேசல் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.
200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் போஸ்டர், டீசர், பாடல்கள் டிரெயிலர் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு ஏற்பட்டது. இப்படத்தின் ஒருவரி என்பது, சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன்( சிவா) ராணுவத்தில் சேர்ந்து கேப்டனாகி பின், மேஜராகினார். அதன்பின், காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு செயல்களுக்கென இருக்கும் 44 வது ராஷ்டிரிய ரைபில்ஸ் படைப்பிரிவில் சேர்ந்து திறமையாகச் செயல்படுகிறார்.
இதற்கு முன்பு, தன் நீண்ட நாள் காதலியான இந்துவை (சாய்பல்லவி) பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் காதல் வாழ்க்கை, காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக முகுந்த் வரதராஜனின் அதிரடி செயல்பாபடுகள், தேசத்தை காப்பற்ற அவரது தியாகமாக கருதப்படும் வீரமரணமே இப்படத்தின் கதையாக உள்ளது.
ஏற்கனவே துப்பாக்கி உள்ளிட்ட படங்களிலும் ராணுவ வீரரின் வாழ்க்கையை கூறினாலும் இது வித்தியாசமாகவும் ஆக்சன் பார்முலாவில் உள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இப்படத்தின் சிவாவின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
விஜய், ரஜினிக்கு அடுத்த இடத்தில் சிவா
இந்த நிலையில் விஜயின் தி கோட் படம் தமிழ் நாட்டில் முதல் நாளில் 38 கோடி வசூலித்தது. ரஜினியின் வேட்டையன் படம் 20.50 கோடி வசூலித்தது. கமலின் இந்தியன் 2 படம் முதல் நாளில் ரூ.13.50 கோடி வசூலித்து.
இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டரில் வெளியான அமரன் படம் முதல் நாளில் 15 கோடி வசூலித்துள்ளது. எனவே தி கோட், வேட்டையன் ஆகிய படங்களுக்கு அடுத்து சிவாவின் அமரன் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூலில் 3 வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இப்படம் முதல் நாளில் இந்தியளவில் 21 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும், உலகளவில் 28 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும், இப்படம் தான் சிவாசின் சினிமா கேரியரில் முதல் நாள் ரிலீசின்போது கிடைத்த அதிக வசூல் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். மேலும், வரும் நாட்களிலும் வசூலில் சாதனை படைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.