வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பௌலர்களே வேண்டாம் என இந்திய அணி வீழ்த்திய 8 விக்கெட்டுகள்.. 1999இல் நியூசிலாந்தை ஓட விட்டு விரட்டிய வீரர்கள்

மிஸ்டர் 360, எல்லா திசையிலும் அடிக்கும் வீரரை இப்படி அழைப்பார்கள். குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் ஏ பி டி வில்லியர்சை அப்படி அழைப்பார்கள். பவுலர்கள் எந்த திசையில் போட்டாலும் அந்த திசையில் பொளந்து கட்டி விடுவார் ஏபிடி. அதேபோல் பேட்டிங், பௌலிங், பில்டிங், என சிறந்து விளங்கும் வீரரை மிஸ்டர் 360 என அழைப்பார்கள்.

இந்திய அணி ஒரு போட்டியில் எங்களுக்கு பௌலர்களே தேவையில்லை என அனைத்து விக்கெட்டுகளையும் ரன் அவுட் மூலம் எடுத்துள்ளனர். ஆம் கிட்டத்தட்ட வீரர்கள் அனைவரையும் பெரும்பாலும் ஓடவிட்டு ரன் அவுட் செய்துள்ளனர். இந்த சாதனையை இதுவரை எந்த ஒரு அணியும் நிகழ்த்தியது கிடையாது.

ஒரு போட்டியில் எட்டு விக்கெட்டுகள் ரன் அவுட் மூலம் வெளியேறியது அதுவே முதல் முறை. அதன் பின் 4 ரன்னவுட்கள் தான் சாதனை. இப்படி நான்கு வீரர்களை ரன் அவுட் செய்தது இரண்டு அணிகள். ஒன்று ஆஸ்திரேலியா மற்றொன்று நியூசிலாந்து. இதுதான் இந்திய அணி செய்த 8 ரன் அவுட் களுக்கு அடுத்து இருக்கும் சாதனை.

நியூசிலாந்து நாட்டில் நேப்பியர் மைதானம் உள்ளது. அங்கே 1999இல் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 214 ரன்களுக்கு எட்டு விக்கெட்டை இழந்தது. அதன் பின் இந்திய அணி 218 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அந்த போட்டியை வென்றது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் கிட்டத்தட்ட 6 ரன் அவுட்டுகள் செய்தனர். இரண்டு விக்கெட் ஸ்டம்பிங் மூலம் கிடைத்தது. ஸ்டம்பிங் மூலம் கிடைத்த விக்கெட்டையும் ரன் அவுட் கணக்கில் சேர்த்து கிட்டத்தட்ட இந்திய அணி எட்டு ரன் அவுட்டுகளை ,இதில் செய்து அசத்தியது. இந்த எட்டு ரன் அவுட் ரெக்கார்டை இதுவரை எந்த அணியும் செய்யவில்லை

Trending News