ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

போர் கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும்.. ரியல் அமரன் முகுந்த் வரதராஜனின் வீர வரலாறு

Mukunth Varadharajan: மேஜர் முகுந்த் வரதராஜன் இந்த பெயரை தான் இப்போது சோஷியல் மீடியாவில் பலரும் தேடி வருகின்றனர். இவருடைய வாழ்க்கையையும் வீர வரலாறையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது.

இந்தியாவே ராயல் சல்யூட் அடித்த இவர் சாதாரணமானவர் கிடையாது. எதிரிகளின் கோட்டைக்குள்ளே நுழைந்து அவர்களை கூண்டோடு அழித்த பெருமைக்குரியவர். அவரை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் அமரன் படம் வெளியாகி இருக்கிறது.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்திருக்கும் இப்படம் தற்போது பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. அதன் ரியல் ஹீரோவான முகுந்த வரதராஜனின் வீர வரலாறு பற்றியும் அவருடைய கடைசி நிமிடங்கள் பற்றியும் இங்கு காண்போம்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த முகுந்த் படிப்படியாக தன்னுடைய கனவை நனவாக்கினார். இந்திய ராணுவத்தின் 44ஆவது ராஷ்ட்ரிய ரைபிள் படையின் மேஜராக பணியாற்றிய இவர் பல தீவிரவாத சதிசெயல்களை முறியடித்து இருக்கிறார்.

அவர் உடலில் இருக்கும் பல வீர தழும்புகளே இதற்கு சாட்சி. கடந்த 2013 ஜூன் மாதம் காஷ்மீரில் யாச்சு குகன் பகுதியில் ஆப்பிள் தோட்டம் சின்னாபின்னமானது. அங்கு தீவிரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் வந்தது.

அதை அடுத்து மேஜர் முகுந்த் தலைமையிலான படை துரிதமாக செயல்பட்டு தீவிரவாதிகளை கண்காணித்தது. அதில் பல திட்டமிடல்களுக்குப் பிறகு முகுந்த் வரதராஜன் முக்கிய தீவிரவாதியான அல்டாப் பாபாவை நேருக்கு நேர் சுட்டுக் கொன்றார்.

அப்போது அவரிடமிருந்து சில ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில் பல ரகசிய கோட் வேர்ட் இருந்துள்ளது. அதைப்பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வதற்காக முகுந்த் அதை ஆய்வுக்கு அனுப்புகிறார்.

யார் இந்த மேஜர் முகந்த் வரதராஜன்

சில மாதங்கள் கழித்து அதன் ரிசல்ட் வந்த நிலையில் அதே தீவிரவாத அமைப்பு காஷ்மீரின் சோபியா மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. பொதுமக்கள் வாழும் இடத்தில் ஒரு வீட்டில் இருந்தபடியே அவர்கள் தங்களுடைய சதித்திட்டங்களை அரங்கேற்ற இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதை தடுப்பதற்காக மேஜர் தன் குழுவினருடன் அல்டாப் வாணி என்பவருக்காக காத்திருக்கிறார். இவர்தான் அந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர். அவர் அந்த வீட்டுக்குள் வருவதை பார்த்த மேஜர் தன் நண்பன் விக்ரம் சிங்குடன் அங்கு செல்கிறார்.

அப்போது நடந்த தாக்குதலில் விக்ரம் சிங் உயிரிழக்க நேருடுகிறது. தன் நண்பனின் மரணத்தை பார்த்த பிறகும் கவனம் சிதறாத முகுந்த் வெற்றிகரமாக தீவிரவாதிகளை அவர்களின் கோட்டையிலேயே வைத்து சுட்டுக் கொல்கிறார்.

இந்த செய்தியை தன் குழுவிற்கு கூறிய அவர் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுகிறார். அப்போதுதான் அவர்களுக்கு தெரிகிறது. மேஜர் உடலில் பல குண்டுகள் துளைத்துள்ளது என. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

ஆனால் செல்லும் வழியிலேயே மேஜர் வீரமரணம் அடைகிறார். வீர மரணம் அடைய வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை அது கடைசியில் நிறைவேறி விட்டது. அதேபோல் நான் மரணம் அடைந்தால் நீ அழக்கூடாது என மேஜர் அடிக்கடி தன் மனைவியிடம் கூறுவாராம்.

அதனாலேயே மேஜர் மரணம் அடைந்த பிறகு அவருடைய மனைவி இந்து கம்பீரமான புன்னகையுடன் இறுதிச் சடங்கில் நின்றார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு உயரிய விருதான அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அப்போதும் கூட இந்து நிமிர்வுடன் அதை பெற்றுக் கொண்டார்.

அப்படி ஒரு கதாபாத்திரத்தில் தான் சாய்பல்லவி நடித்து தற்போது பாராட்டுகளை பெற்று வருகிறார். அதேபோல் வீரத்திருமகன் முகுந்த் வரதராஜனாக வாழ்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு இப்படம் வாழ்நாள் பேர் சொல்லும் படமாக அமைந்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News