சனிக்கிழமை, நவம்பர் 2, 2024

சிவகார்த்திகேயனுக்கு கேரியர் பிரேக் கலெக்சன் கொடுத்த 3 படங்கள்.. இரண்டு பெஸ்ட் வசூலையும் தூக்கி சாப்பிட்ட அமரன்

சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 450 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளிலும் இந்த படம் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டை விட ஆந்திராவில் இதற்கு அதிக தியேட்டர்கள் கொடுக்கப்பட்டது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பின் அதிகம் ஸ்கோர் பண்ணியவர் சாய் பல்லவி. ஆந்திரா மற்றும் கேரளாவில் இவருக்கு அதிக ஃபேன்பேஸ் இருப்பதால் இந்த படம் அங்கேயும் பிச்சிக்கிட்டு போகிறது. ஆந்திராவில் நடிகர் நிதின் ரெட்டி இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்துள்ளார். தெலுங்கு மாஸ் நடிகர்களுக்கு நிகராக சிவாவின் அமரன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கே 450 தியேட்டர்களில் ரிலீசான அமரன் படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 13 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. இதுதான் சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் ஓபனிங் கலெக்சன் படம். இதற்கு முன் அவரின் இரண்டு படங்கள் முதல் நாளில் அதிக வசூலை பெற்று தந்துள்ளது. ஆனால் அந்த இரண்டு படத்தையும் அமரன் படம் பின்னுக்கு தள்ளிவிட்டது.

வேலைக்காரன்: 2017ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா, சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் வேலைக்காரன். இந்த படம் முதல் நாளில் மட்டும் பத்தரை கோடிகள் வசூல் செய்துள்ளது. அமரன் படத்துக்கு முன்னர் இதுதான் சிவகார்த்திகேயனுக்கு முதல் நாள் வசூல் பெஸ்டாக இருந்தது. இந்த படத்தில் பகத் பாசில், சிவகார்த்திகேயனுக்கு நிகராக நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார்.

அயலான்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் முதல் நாள் மட்டும் பத்து கோடிகள் வசூல் செய்தது. வேலைக்காரன் மற்றும் அயலான் இந்த இரண்டு படங்களும் தான் சிவகார்த்திகேயனுக்கு முதல் நாள் 10 கோடிகள் வசூலை காட்டிய பெஸ்ட் கலெக்சன் படங்களாக இருந்தது. இப்பொழுது தீபாவளி ரேசில் அமரன் பட்டையை கிளப்பி முதலிடத்தை பிடித்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News