வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கோலி வேணாம்.. இவருதான் புதிய கேப்டன்.. அந்த இளம் வீரருக்காக பல கோடி வாரி இறைக்கும் ஆர்.சி.பி

ஐபிஎல் அணிகளில் ஒன்றாக ஆர்.சி.பியின் புதிய கேப்டனாக 32 வயது வீரரை அணியின் நிர்வாகம் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் கோலாகலமாக நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் 18 வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன் சென்னை கிங்ஸ், ஆர்.சி.பி, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் உள்ளிட்ட அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளவே நினைத்தது.

அதன்படி, சென்னை அணியில் தல தோனியைத் தக்க வைத்த நிலையில், இம்மெகா ஏலத்துக்கு முன் ராயர் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மொத்தமே 3 வீரர்கல்ளைத்தான் அணியில் தக்க வைத்துள்ளது. அதன்படி, விராட் கோலியை 21 கோடிக்கு தக்க வைத்த நிலையில், ராஜத் படிதரை 11 கோடிக்கும், யாஷ் தயாளை 5 கோடிக்கு தக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் ஆர்.சி.பி அணிக்கு ஆர்டிஎம் கார்டுகள் மீதமாகியுள்ளது. ஆனால், கேப்டன் பாப் டு பிளசியை அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. இது ஏன் என தெரியவில்லை. அணியை வழி நடத்திச் செல்வதிலும், வீரர்களை அரவணைத்துச் செல்வதிலும் திறமை மிக்க அவரை ஏன் தக்க வைக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கோலிக்குப் பதிலாக புதிய கேப்டன் யார் தெரியுமா?

இந்நிலையில், விராட் கோலியை 21 கோடிக்கு நிர்வாகம் தக்க வைத்துள்ளதால் இத்தனை கோடியில் தக்க வைக்கப்பட்ட அவரையே கேப்டன்சியில் அமர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், விராட் கோலி அணியின் இருந்து இதுவரை 143 போட்டிகளில் அணியை வழி நடத்தி ஒரு கோப்பையை கூட வென்றதில்லை என்ற குறையுண்டு.

அதேபோல் விராட் கோலியை கண்டு சர்வதேச அணி வீரர்களே அலறிய நிலை மாறி 2021 ஆம் ஆண்டு முதல் அவர் சரியாக பேட்டிங் இல்லை என விமர்சனம் எழுந்து வருகிறது. ஐபிஎல் உள்ளிட்ட அதன்பின் அனைத்து கேப்டன்சிகளில் இருந்தும் அவர் விலகினார். இந்த நிலையில் சமீபகாலமாக அவரது ஃபெர்பாமென்ஸும் சரியில்லை.

இருப்பினும் மூத்த வீரர் முன்னால் கேப்டன் என்ற ரீதியில் நிர்வாகம் அவரிடம் மீண்டும் கேப்டனாக செயல்பட வேண்டுமென வலியுறுத்திய நிலையில் கோலி அதை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் 18 வது சீசன் மெகா ஏலத்தில் கே.எல். ராகுலை வாங்கி, அவரை ஆர்.சி.பிக்கு கேப்டனாக்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

ஒரு வீரருக்காக மற்றொரு வீரரை கைவிடும் அணி

தற்போது 32 வயதாகும் ராகுலை வேறு அணியினர் ஏலத்தின் எடுக்கும் முன்பு அவரை அணியின் எதிர்கால வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் வழிகாட்டலுக்கும் ஏற்றவர் என நிர்வாகம் கணித்து இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி, ராகுல் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ரசிகர்களும், ஆதரவும் அதிகம். இதனால் அதிக தொகை கொடுத்து ராகுலை வாங்க, இப்போதைக்கு ஆர்.சி.பி அணி திட்டமிட்டுல்ள்ளதாவும், இதற்காகவே அந்த அணியில் இருந்து சிராஜை இம்முறை கைவிட முடிவெடுத்ததாகவும் தகவல் வெளியாகிறது.

Trending News