Thalapathy Vijay: விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து தமிழக அரசியல் தலைவர்களின் பார்வை அவர் மீதுதான் இருக்கிறது. அவர் பேசுவதற்கு ரெஸ்பான்ஸ் பண்ணலாமா இல்லை அமைதியாக இருக்கலாமா என்பதே பெரிய போராட்டமாக இப்போது அரசியல் புள்ளிகளுக்கு இருக்கிறது.
ஆனால் விஜய் கூலாக நிறைய விஷயங்களை கையாண்டு கொண்டு இருக்கிறார். மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது, அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து சொல்வது என தன்னை படிப்படியாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
நேற்று வரைக்கும் விஜய் அதிகமாக வசைப்பாடியது யார் என்று கேட்டால் நாம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை தான் சின்ன குழந்தை கூட கை காட்டும். ஆனால் விஜய் அசால்டாக சகோதரர் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இன்று பெரிய பிரச்சனையை ஒன்றும் இல்லாமல் ஆக்கி இருக்கிறார்.
கமலை கண்டு கொள்ளவே இல்லையே!
அதேபோன்று பெரிய அரசியல் தலைவர்கள் ஆன அன்புமணி ராமதாஸ் மற்றும் தொல் திருமாவளவன் போன்றவர்களுக்கும் பிறந்த நாளின் போது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் விஜய். இன்று பிறந்தநாள் கொண்டாடிய சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், நேற்று பிறந்த நாள் கொண்டாடிய உலக நாயகன் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
அரசியல் என்பதை தாண்டி கமல் விஜய்க்கு சினிமாவில் சீனியர். இப்போது அரசியலிலும் சீனியராக இருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது விஜய் ஏன் இந்த வாழ்த்து தெரிவிக்காமல் விட்டார் என பலருக்கும் கேள்வி எழுந்திருக்கும்.
இதற்கு முழுக்க காரணமாக இருப்பது கமல் திமுக கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது தான் என சொல்லப்படுகிறது. அப்படி பார்த்தால் திருமாவளவன் கூடத்தான் திமுக கட்சியில் கூட்டணி வைத்திருக்கிறார்.
மேலும் பாமக மற்றும் விசிக கட்சிகள் தன்னுடன் கூட்டணிக்கு வர வேண்டும் என்பதால் அவர்களை விஜய் சுமூகமாக கையாள்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு வேளை கமலஹாசனின் கூட்டணி தனக்கு தேவையில்லை என்ற முடிவை தேர்தலுக்கு முன்னமே எடுத்துவிட்டார் போல தளபதி,