Amaran Collection: கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்திருக்கும் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் படமான இதற்கு எல்லா பக்கமும் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அரசியல் பிரபலங்கள் கூட இப்படத்தை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கும் திரையிட வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 45 கோடி வரை வசூல் செய்திருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் ஏறுமுகமாகவே இருந்தது. தயாரிப்பாளர் கமல் கூட தன் சோசியல் மீடியா பக்கத்தில் அமரன் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார். அது தவிர பட குழு சக்சஸ் மீட் வைத்த தங்களுடைய மகிழ்ச்சியையும் நன்றாக வருகின்றனர்.
அமரன் படத்தின் மொத்த வசூல் நிலவரம்
இப்படி ஒரு வாரம் கழிந்த நிலையில் திடீரென இப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியுள்ளது. சில அமைப்புகள் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் அமரன் திரையிடப்படும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது.
ஆனால் படம் வெளியாகி ஒரு வாரம் முடிந்த பின்பு திடீரென எதிர்ப்புகள் கிளம்புவது வேடிக்கையாக தான் இருக்கிறது. நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இப்ப எதுக்கு கிளம்பி வரீங்க என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூட கலாய்த்து வருகின்றனர்.
ஏனென்றால் படம் வெளியான 8 நாட்களிலேயே உலக அளவில் 150 கோடி வசூலை தாண்டி விட்டது. அதேபோல் 9 நாட்கள் முடிவில் அமரன் 190 கோடியை வசூல் செய்திருக்கிறது. வார இறுதி வந்து விட்டதால் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
ஏனென்றால் இப்போதும் அமரன் அரங்கம் நிறைந்த காட்சிகளாக தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்த வாரம் கங்குவா வெளிவர இருக்கும் சூழலில் சிவகார்த்திகேயன் அதற்கும் டஃப் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.