Amaran: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் அமரன் படம் பற்றிய பேச்சு தான். ஒரு பக்கம் ரீல் ஜோடிகளான சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் ரியல் ஜோடிகளான மறைந்த மேஜர் முகுந்து வரதராஜன் மற்றும் அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் பற்றி தகவல்களை திரட்டி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
TAG HEUER வாட்சை பரிசளித்த SK
சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் இந்த படம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக அமைந்துவிட்டது. ரஜினி மற்றும் விஜய்க்கு பிறகு குறுகிய நாளில் 100 கோடி வசூல் செய்த படமாக அமரன் மாறி இருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ் சாய்பல்லவி என்றால் அதே அளவுக்கு பாசிட்டிவ் படத்தின் இசை.
இந்த படத்தின் வெண்ணிலவு சாரல் நீ மற்றும் மின்னலே போன்ற பாடல்கள் பலரது ரிங்டோனாக மாறியிருக்கிறது. ஜிவி பிரகாஷ் தன்னை சிறந்த ஒரு இசையமைப்பாளராக மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.
அமரன் வெற்றியால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு வாட்ச் ஒன்றை பரிசளித்திருக்கிறார். விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் எனும் கேரக்டரில் நடித்திருந்தபோது ரோலக்ஸ் வாட்ச் அவருக்கு கமலஹாசன் பரிசளித்திருந்தார்.
அந்த சமயம் இந்த வாட்ச் தமிழ் நாட்டில் பெரிய அளவில் பேமஸ் ஆனது. அதை தொடர்ந்து தற்போது அமரன் பட வெற்றிக்காக ஜிவி பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன், TAG HEUER வாட்ச் பிராண்டை பரிசளித்திருக்கிறார். இதன் விலை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தில் தொடங்கி 21 லட்சம் வரை இருக்கிறது.
பெரும்பாலும் இந்த கடிகாரங்களை கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் செல்லும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது துல்லியமான மணியை கணக்கிடுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த வாட்ச் கம்பெனி முதன் முதலில் சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரபலமான மாடல்கள், மொனாக்கோ (Monaco), கரேரா (Carrera), ஒமேகா (Omega) மற்றும் ஃபார்முலா 1 (Formula 1) ஆகியவை ஆகும்.