ஒரே வருடத்தில் 4 வெள்ளிவிழா படங்கள்.. எத்தனை யுகங்கள் ஆனாலும் அழிக்க முடியாத விண்வெளி நாயகனின் வரலாறு

Kamal: 70 வயதிலும் பிஸியாக நடித்து வருவது மட்டுமல்லாமல் பல விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வதிலும் கமலுக்கு நிகர் அவர் மட்டும்தான். தற்போது அமெரிக்காவில் ஏஐ பற்றி படித்து வரும் இவர் சில தினங்களுக்கு முன் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

அன்றைய நாளின் சிறப்பாக மணிரத்தினம் இயக்கத்தில் அவர் நடித்து வரும் தக்லைப் படத்தின் ரிலீஸ் தேதி வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது. ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் கமலின் திரையுலக பயணம் அடுத்த தலைமுறைகளுக்கு மிகப்பெரும் ஊக்கமாக இருக்கிறது. அந்த வகையில் ஏழு முறை ஆஸ்கர் கதவுகளை தட்டிய ஒரே தென்னிந்திய நாயகனும் இவர்தான்.

அது மட்டும் இன்றி நான்கு தேசிய விருதுகள் உட்பட 200க்கும் மேற்பட்ட விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார். கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் அமெரிக்காவில் 12 தியேட்டர்களில் திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் நாயகன் தான். அது தவிர ஒரே வருடத்தில் நான்கு வெள்ளி விழா படங்களை கண்ட நாயகனும் இவர்தான். அதன்படி 1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படமான சனம் தேரி கசம் 369 நாட்கள் ஓடியது.

தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

வாழ்வே மாயம் 108 நாட்களும் சகலகலா வல்லவன் 110 நாட்களும் மூன்றாம் பிறை 200 நாட்களை கடந்தும் ஓடி சாதனை படைத்தது. அதேபோல் முதல் முறையாக ஒரு நடிகனுக்கு மாநாடு நடத்தி காட்டியதும் இவர்தான்.

மேலும் கமல் உடல் தானம் செய்திருக்கிறார். ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் நடிகரும் இவர்தான். அது மட்டும் இன்றி இவர்களுடைய இந்த நற்பணி இயக்கத்தின் மூலம் இதுவரை 45 லட்சம் லிட்டர் ரத்த தானம் செய்யப்பட்டிருக்கிறது.

இப்படி அவரின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். தற்போதும் கூட அரசியல் நடிப்பு பட தயாரிப்பு என எப்போதுமே தன்னை பிசியாக தான் வைத்துள்ளார். அந்த வகையில் எத்தனை யுகங்கள் ஆனாலும் இந்த விண்வெளி நாயகனின் வரலாறு யாராலும் அழிக்க முடியாதது.

Leave a Comment