வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

ரஜினி, கமல் இடையே உள்ள வித்தியாசம் என்ன? ஓபனாகப் போட்டு உடைத்த லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் மா நகரம் படம் மூலம் இயக்குனராகி இன்று முன்னணி இயக்குனராக தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் படத்தில் நடிக்க உச்ச நடிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே கமலுடன் விக்ரம், விஜயுடன் மாஸ்டர், லியோ ஆகிய படங்களின் கூட்டணி வைத்த அவர், தற்போது சூப்பர் ஸ்டார் நடிப்பில் கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன்பிக்சர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் வித்தியாசமான ரஜினியை பார்க்கலாம் என்று லோகேஷ் கூறிய நிலையில், இப்படமும் எல்.சி.யுவில் உருவாகி வருவதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

கமல் கூட்டணியில் விக்ரம் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த லோகேஷ் இப்போது ரஜினியுடன் கூலி படத்தில் பணியாற்றி வரும் நிலையில், ரஜினி – கமல் ஆகிய இரண்டு உச்ச நடிகர்களுக்கு இடையிலான வித்தியாசம் பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் இடையே உள்ள வித்தியாசம் குறித்து அவர் கூறியதாவது:

ரஜினிகாந்த் சார் ஒரு இயக்குனரின் நடிகர். அவர் திரையில் கொண்டு வரும் மேஜிக் என்பது ஆப் ஸ்கிரீன், ஆன் ஸ்கிரீன் இரண்டு இடத்திலும் எவ்வித வித்தியாசமும் இருக்காது. அடுத்து ஷூட்டிங்கில் என்ன நடிக்க வேண்டும் என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்.

தன்னுடன் நடிக்கும் மற்ற நடிகர்கல்ல் என்ன நடிக்கப் போகிறார்கள். அதுக்கு ஏற்ப தான் எப்படி நடிக்க வேண்டும் எனத் தயாராகி கொண்டிருப்பார். இயக்குனர் ஆலோசனை கூறினால் அதை வேண்டாமென கூற மாட்

கமல்ஹாசன் சார் ஒரு நடிகரை தாண்டி அவர் ஒரு டெக்னீஷியன் என்று அவரே சொல்லியிருக்கிறார். ஒரு காட்சியைப் பற்றி நடிகரிடம் பேசுவதற்கும், தொழில் நுட்ப கலைஞரிடம் பேசுவதற்கும் இப்போது வித்தியாசத்தைக் காண்கிறீர்கள். ரஜினி- கமல் ஆகிய இருவருக்கும் இடையே நான் கண்ட வித்தியாசம் இதுதான்.

நடிப்பு விஷயத்தீல் அது எப்படி உணர்கிறேன் என்று விளக்க முடியாது. குறிப்பாக ஆக்சன், கட் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் சொன்னால் இரு லெஜண்ட்களும், நடிகர் என்பதைத் தாண்டி கேரக்டராகாவே மாறிவிடுவர் என்று புகழ்ந்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News