சினிமாவைப் பொருத்தவரை இயக்குனர், நடிகர் என யார் ஜெயித்தாலும் அவர்களை தயாரிப்பாளர்கள் மொய்த்துவிடுவர். அவர்களின் கால்ஷீட் தேதியை சில வருடங்களுக்கு வாங்கி வைத்து, படங்கள் செய்ய ஒப்பந்தம் போடுவர். இதுதான் வழக்கம்.
அதேபோல் கடந்த ரங்கூன் என்ற படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு அமரன் என்ற பெரிய பட்ஜெட் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் கமல். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி ஆகியோர் நடிப்பில் அமரன் படத்தை இயக்கி, தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட்டாகி அது ரூ.250 கோடி வசூல் குவித்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷின் புதிய படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கப் போவதாக தகவல் வெளியானது. அதன்படி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், தனுஷின் 55 வது படமாக உருவாகும் இப்படத்தை கோபுரம் பிக்சர்ஸ் சார்பில் அன்பு செழியன் தயாரிக்கிறார். இந்த தொடக்கவிழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில், தனுஷ், ரா.,பெரியசாமி அன்புச் செழியன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே தனுஷும் வாத்தி, கேப்டன் மில்லர், ராயன் ஆகிய படங்களின் மூலம் தொடர்ந்து ஹிட் கொடுத்திருக்கும் நிலையில், ராஜ்குமார் பெரியசாமியுடன் அவர் இணையும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படமும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என ரசிகர்கள் கணக்குப் போட துவங்கிவிட்டனர்.
ராயன் படத்தில் ஒதுங்கிய புரடியூசர் தனுஷ் 55-ல் சேர்ந்தது எப்படி?
இந்த நிலையில், ராயன் படமே மதுரை அன்பு தான் தயாரிக்க வேண்டியதாம். ஏனென்றால் தனுஷுகும் மதுரை அன்பு செழியனுக்கும் கமிட்மெண்ட் இருக்கும் நிலையில், அப்படத்தின் அதிக வன்முறை இருப்பதாலும், இதற்கு முன் அவர் எடுத்த படங்களும் வன்முறை சார்ந்து இல்லை என்பதாலும் அப்படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
எனவே இருவரும் படம் எடுக்கும் சூழலும் இதுவரை அமையாத நிலையில் ராஜ்குமார் பெரியசாமியின் கதை இருவருக்கும் பிடித்துப் போனதால், தனுஷ்55 படத்தில் தனுஷ் – அன்பு செழியன் கூட்டணி அமைக்க சம்மதித்துள்ளதாகவும், தற்போது அமரன் படம் வசூலும் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் என்ன சொன்னாலும் எத்தனை கோடி பட்ஜெட் என்றாலும் அதை செலவழிக்க மதுரை அன்பு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.