சூர்யாவின் கங்குவா படத்திற்கு தொடர்ந்து ஏதாவது ஒரு சிக்கல் வந்து கொண்டே தான் இருக்கிறது. முதலில் காசு பிரச்சனை, பிறகு ரிலீஸ் பிரச்சனை, நடுவில் VFX பிரச்சனை, தற்போது மீண்டும் ஒரு காசு பிரச்சனை என்று நாலாப்பக்கத்திலிருந்தும் பிரச்சனையை சமாளித்து வரும் ஞானவேல் ராஜா, தற்போது, அவர் வாயால் ஒரு வம்பை விலைகொடுத்து வாங்கி இருக்கிறார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் 3வது வாரத்திலும் தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமே 115 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது. இதில் அனைத்து தரப்பினருக்கும் லாபம் ஈட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். இப்படி இருக்க, படத்தை பலர் பாராட்டி வருகின்றனர். சம்மந்தமே இல்லாமல், ஜாதி மதத்தை எல்லாம் உள்ளே கொண்டு வந்து பிரச்சனை செய்தாலும், அதை எதையும் மக்கள் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பொளக்கும் SK ரசிகர்கள்
அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவே மாறி திரையில் ராணுவ வீரராகவே தன்னை நிரூபித்த நிலையில், அவரது உழைப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி இருக்க படத்தை ஞானவேல் ராஜா மும்பையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார்.
அமரன் படம் நல்லா போகுது என அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் நான் கூட மிஸ் காஸ்டிங் என நினைத்தேன். ஆனால், உங்களுடைய உழைப்பு படத்தை சூப்பராக மாற்றியிருக்கிறது என ஞானவேல் ராஜா கூறியதை அப்படியே வெளிப்படையாக ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
“எதே மிஸ் காஸ்டிங் ஆ.. அது எப்படி அவர் நடிப்பை நீங்க மதிக்காமல் பேசலாம்.. அவரது உழைப்புக்கு இது தான் மரியாதையா ” என்று கேட்டு பொளந்து வருகிறார்கள். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நாங்க யாரும் கங்குவா படத்தை பார்க்கமாட்டோம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.