Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் பல வருடங்களுக்கு முன்பு விட்ட கண்ணீர் போகவில்லை என்று கூறும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ரெமோ படத்தின் வெற்றி விழாவில் தன்னை படத்தில் நடிக்க விடாமல் பலர் சதி செய்வதாக கண்ணீர் மல்க பேசி இருப்பார்.
மேலும் தன்னுடைய படங்கள் ரிலீஸ் செய்வதிலும் பிரச்சனை வருவதாகவும் ரெமோ படத்தை பல போராட்டங்களுக்கு பின் வெளியிட்டதாக கூறி இருந்தார். இதற்கெல்லாம் காரணம் ஞானவேல் ராஜா தான் என்று ஒரு பேச்சு அப்போதுலிருந்தே போய்க்கொண்டிருந்தது.
அதாவது ஏற்கனவே பருத்திவீரன் பட சர்ச்சையில் அமீர் மற்றும் ஞானவேல் இடையே பிரச்சனை நடந்தது. கடைசியில் பொது வழியில் அமீரிடம் ஞானவேல் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையை சிவகார்த்திகேயனை தன் படத்தில் ஒப்பந்தம் செய்ததால் மற்ற படங்களில் ஞானவேல் நடிக்க விடாமல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயனால் கங்குவா படத்தில் ஏற்பட்ட சிக்கல்
இதனால் சிவகார்த்திகேயன் பல பட வாய்ப்புகளை இழந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடைசியாக வேறு வழியில்லாமல் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துக் கொடுத்தார். அந்தப் படத்திலும் 15 கோடி சம்பளம் பேசிய நிலையில் படம் முடிந்த பிறகு 11 கோடி மட்டுமே ஸ்டூடியோ கிரீன் சம்பளம் கொடுத்துள்ளது.
தனக்கு நாலு கோடி பாக்கி வைத்திருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மீது அப்போது சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவகார்த்திகேயன் வழக்கும் தொடர்ந்திருந்தார். வளர்ந்து வரும் நடிகராக இருந்தபோது சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார்.
இப்போது சூர்யாவின் கங்குவா படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. இந்த படம் நாளைக்கு திரைக்கு வரும் நிலையில் வெளிநாடுகள் என பல இடங்களில் ப்ரொமோஷன் படு பயங்கரமாக நடந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 50 சதவீத தியேட்டர் மட்டுமே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு காரணம் சமீபத்தில் தீபாவளி அன்று வெளியான அமரன் படம் எப்போதும் ஹவுஸ்புல்லாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் கங்குவா படத்தின் மூலம் பெரிய லாபத்தை ஸ்டுடியோ கிரீன் பெருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.