இந்திய சினிமாத்துறையினரால் எப்போதுமே வியந்து பார்க்கப்படுபவர் கமல்ஹாசன். அவர் தன் படங்களில் புதுமை புகுத்துவது, ஹாலிவுட் தரத்தில் தொழில் நுட்பம், இயக்கம், மேக் அப் என பலவற்றை அறிமுகம் செய்து, இந்திய சினிமாவின் முன்னோடியாக கருதப்படுகிறார்.
50 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் பயணித்து வந்தாலும் இன்னும் இளைஞர்களுக்கு முன் மாதிரியாக ஓடிக் கொண்டிருக்கிறார். உச்ச நடிகராக பல கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு படங்களை ஹிட் கொடுக்கிறார். தயாரிக்கிறார். சமீபத்தில் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பி சிவா – சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்துள்ளார். அடுத்து சல்மான் கானுடன் இந்தியில் ஒரு படமும், பிரபாஸுக்கு வில்லனாக கல்கி 2 ல் நடிக்கவிருக்கிறார்.
சினிமாவில் கமல்ஹாசனுக்கு தெரியாத விஷயமில்லை என்று எல்லோராலும் கூறப்படும் நிலையில், இவர் தான் நடித்த ராஜபார்வை, விக்ரம், குருதிப் புனல், ஈ நாடு (தெலுங்கு ), தூங்காவனம், மகாநதி, தேவர்மகன், ஹேராம், விஸ்வரூபம், விருமாண்டி, உன்னைப் போல் ஒருவன், உள்ளிட்ட பல படங்களுக்குத் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
கமலின் திரைக்கதை ஸ்டைல் பற்றி பிரபலம் ஒருவர் கூறியதாவது;
அப்படங்கள் எல்லாம் சினிமாத்துறையினராலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு ஆல் டைம் ஃபேவரெட் மூவியாக உள்ளன. இந்த நிலையில், சினிமா பிரபலம் ஒருவர் யூடியூப்பிற்கு அளித்த பேட்டியில் கமலின் திரைக்கதை எழுதுவது பற்றிப் பகிர்ந்திருக்கிறார்.
அதில், ”கமல்ஹாசன் சார் எல்லோரும் ஒரு பக்க பேக்கரில் பாதியில் மட்டும் திரைக்கதை எழுதுவது மாதிரி எழுத மாட்டார். அவர் ஸ்டைலே தனி. அவர் ஒரு நாவல் மாதிரி தான் திரைக்கதை எழுதுவார்.
சந்தான பாரதி இயக்கிய மகா நதி படத்திற்கு கமல்ஹாசன் எழுதிய ஸ்கிரிப்டை நான் படித்தபோது, ஒவ்வொரு காட்சியும் கண் முன் விரிந்தது. இப்படி யாராலும் எழுத முடியாது. திரைக்கதை வடிவமைப்பில் அவர் ஒரு ஜீனியஸ்” என்று புகழ்ந்துள்ளார்.
இதைக்கேட்டு கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மற்ற நடிகர்கள் மாதிரி எதுவும் செய்ய தயங்கி நிற்பவர் அல்ல. அதனால் தான் தோல்விகள் பார்த்தாலும் வெற்றியை நோக்கியே கமல் பயணித்து வருகிறார் என்று ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் கமல் அடுத்து மருதநாயகம் படத்தை எப்போது இயக்கி, வெளியிடுவார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.