வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

வாழ்க்கை ஜீரோவாக இருந்தது, தனுஷ் செஞ்சது பெரிய விஷயம்.. விக்கியின் பழைய பேட்டி பாத்துருக்கீங்களா?

Dhanush: ‘Dankbrekit’ (நன்றியுணர்வு)என்ற ஜெர்மன் வார்த்தையுடன் விக்னேஷ் சிவன் கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஒருவேளை இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் தனுஷ் பற்றி இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டு இருந்த விக்னேஷ் சிவன் நீக்கி இருக்கலாம் போல.

அதாவது தனுஷால் தன்னுடைய வாழ்க்கை எப்படி மாறியது என விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். நடிகர் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் தான் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமானார்.

தனுஷ் செஞ்சது பெரிய விஷயம்

ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் தனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதை அந்த பேட்டியில் விக்னேஷ் சிவன் ரொம்பவும் ஓபன் ஆக பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட தன்னுடைய வாழ்க்கை ஜீரோ நிலைமையில் தான் இருந்தது.

நண்பர்களுடன் சேர்ந்து படங்களுக்கு பேனர் டிசைன் செய்யும் வேலையை செய்து கொண்டிருந்தேன். அப்போதான் எங்களுக்கு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்தில் பேனர் டிசைன் செய்யும் வேலை கிடைத்தது.

ஐஸ்வர்யா மூலம் தான் தனுஷிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எங்களுக்கு VIP படத்தின் பேனர் வேலையை கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் அந்த படத்தில் எனக்கு ஒரு சின்ன ரோலும் கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த சமயத்தில் தனுஷின் இடம் உனக்கு நான் ஏதாவது செய்யணும், என்ன வேணும் சொல் என கேட்டார்.

அப்போதான் என்னிடம் ஒரு கதை இருக்கிறது நீங்கள் அதை தயாரிக்க முடியுமா என்று கேட்டேன். உடனே தனுஷ் அதற்கு ஒத்துக்கொண்டார். அதன் பின்னர் தான் நடிகர் விஜய் சேதுபதி இந்த கதைக்குள் வந்தது. படத்தின் ஹீரோயினாக யாரை தேர்ந்தெடுக்கப் போகிறாய் என தனுஷ் தான் என்னிடம் கேட்டார்.

இந்த கேரக்டருக்கு போல்டான ஒரு நடிகை தான் வேண்டும் என்று தனுஷிடம் சொன்னேன். உடனே தனுஷ் அப்போ நயன்தாரா கிட்ட போய் கதை சொல்லிட்டு வா என்று சொன்னார். நயன்தாரா இந்த கதையை கண்டிப்பா ஓகே சொல்ல மாட்டாங்க சும்மா அவங்கள நேர்ல பாத்துட்டு வரலாம் தான் போனேன்.

அதுக்கப்புறம் நடந்தது எல்லாமே எல்லோருக்கும் தெரியும் என பேசி இருக்கிறார். ஆக மொத்தம் ஜீரோ நிலைமையில் இருந்த விக்னேஷ் சிவனின் வாழ்க்கையை பிள்ளையார் சுழி போட்டு தனுஷ் தொடங்கி வைத்திருக்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

- Advertisement -spot_img

Trending News