Dhanush: நடிகர் தனுஷ் பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். எது எப்படியோ தன்னுடைய கடின உழைப்பால் இன்று உச்ச இடத்திற்கு வந்திருக்கிறார். இதைத் தாண்டி அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது என தற்போது பலரும் தங்களுடைய விமர்சனத்தை சொல்லி வருகிறார்கள்.
நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரல் ஆனது. அதாவது இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்திற்கு தனுஷ் மற்றும் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினர் சென்ற புகைப்படம் தான். இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்தும் கூட யாரோ போல் ஒருவர் ஒருவர் முகத்தை கூட பார்க்கவில்லை.
இது தான் வளர்த்த கிடா மாரில் பாயுறதோ?
ஒரு காலத்தில் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசி விளையாடிய நட்புக்கள்தான் இவர்கள். இதைத் தாண்டி இன்னொரு புகைப்படமும் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. அதே திருமணத்திற்கு வந்த சிவகார்த்திகேயனிடம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம்.
சிவகார்த்திகேயன், இந்த திருமண நிகழ்வில் தனுஷின் ஏதும் பேசியது போல் புகைப்படம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதிலிருந்து ஒருவருக்கொருவர் பேச்சு வார்த்தை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
சிவகார்த்திகேயனை நான் சரியாக தெரிந்து கொள்ளாமல் 3 படத்தில் காமெடியனாக போட்டு விட்டேன். அது என்னுடைய பெரிய தவறு, அதனால் தான் இயக்குனர்களை கதை சொல்ல சொல்லி இரண்டு, மூன்று படங்கள் அவரை ஹீரோவாக நடிக்க வைத்தேன் என ஒரு பேட்டியில் தனுஷ் சொல்லியிருந்தார்.
ஆனால் எந்த ஒரு மேடையிலும் சிவகார்த்திகேயனை நான் தான் வளர்த்து விட்டேன், வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்லவில்லை. என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், ஒரு பழைய நட்பின் நிமித்தமாக ஒருவருக்கொருவர் பொன்முறுவல் செய்வதால் என்ன கெட்டுப் போய்விடும்.
எந்த ஒரு இடத்திலுமே நாம் வேலை செய்தோமா, சம்பாதித்தோமா என இருந்து விட வேண்டும், யாருக்கும் உதவி செய்யவும் தேவையில்லை, யாருடைய உதவியும் நமக்குத் தேவையில்லை என்று வாழ்ந்து விட வேண்டும், இதுதான் தனுஷ் வாழ்க்கையில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என தற்போது பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.