செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

விதிகளை மீறினாரா பும்ரா? கொதிக்கும் ஆஸ்., ரசிகர்கள்.. என்ன நடந்தது?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடந்தது. இந்த மைதானம், பவுலிங்கிற்கு சாதகம் என்பதால் முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளுமே பெரியளவில் ரன் அடிக்க முடியவில்லை.

இந்தியா 150 ரன்களும், ஆஸ்., 104 ரன்களும் எடுத்தன. இரண்டாவது நாளில் இந்தியா அதிரடியாக விளையாடியது. ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்னும், விராட் கோலி 100 ரன்னும் அடித்தனர். எனவே இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. எனவே ஆஸ்.,க்கு 534 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்,. அணியில் ஹெட் 89, மார்ஷ் 47, ஹேரி 36 ரன்னும் அடித்தனர். 10 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில், பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை வென்றது.

பும்ரா பந்துவீச்சில் எழுந்த சர்ச்சை? இந்திய ரசிகர்கள் பதிலடி

எனவே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 61.11 சதவீத புள்ளியுடன் முதலிடத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் பவுலிங்கை தொடர்ந்து, பும்ரா பந்துவீச்சும் சர்ச்சையாகியுள்ளது.

அதாவது, பும்ராவின் பந்து வீச்சு தனித்துவமானது. இதனால் அவரது பந்துவீச்சு, ஆஸ்., வீரர்களுக்கு எறிவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அவர் அதிக விக்கெட் வீழ்த்தியதனால் கூட அவரது பந்துவீச்சை குறைகூற வேண்டி ஆஸ்., ரசிகர்கள் இப்படி விமர்சிக்கிறார்கள் என இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் இங்கிலாந்து வீரரும், பந்துவீச்சு பயிற்சியாளருமான இயான் பாண்ட். ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் விதிப்படி, ஹைப்பர் மொபைலிட்டி விதிமுறைப்படி, பும்ராவின் பந்துவீச்சு விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

11 வது முறையாக 5 வது விக்கெட் சாதனை

முதல் நாளில் 4 விக்கெட் எடுத்த பும்ரா, 2 வது நாளிலும் 11 வது முறையாக ’5 வது விக்கெட் ஹால் சாதனை’ செய்தது குறிப்பிடத்தக்கது. அவரது சாதனைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 2 வது டெஸ்டிலும் அவரது சாதனைகள் தொடரும் என ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News