Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு மற்றும் ஆனந்தி காதலிக்க தொடங்கிய பின் இனி இவர்களது வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்களுடைய காதலை மகேஷிடம் இருந்து மறைத்து நாளுக்கு நாள் குற்ற உணர்ச்சியில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் மீண்டும் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது போலவும் காட்டப்பட்டு கொண்டிருக்கிறது. மகேஷிடம் ஆனந்தியை காதலிக்காதே என்று நேரடியாக சொல்லி அவன் அதை மீறி விட்டால் என்ன செய்வது என அவனுடைய அம்மா புது திட்டம் ஒன்றை போட்டு இருக்கிறார்.
சரியாக காய் நகர்த்திய மகேஷின் அம்மா
மேலும் ஆனந்திக்கு என்ன கஷ்டம் கொடுக்க வேண்டுமோ அதை நான் பார்த்துக் கொள்கிறேன், அன்பு ஆனந்தியை காதலிக்க தூண்டும் செயல்களை நீ பார்த்துக் கொள் என மித்ராவிடம் சொல்கிறார். நான் அன்புவை காதலிக்கிறேன் அதனால் நீ எனக்கு வேண்டாம் என ஆனந்தி மகேஷிடம் சொல்ல வேண்டும் அந்த மாதிரி இந்த திட்டம் இருக்க வேண்டும் என்ற பிளான் பண்ணுகிறார்கள்.
அதே நேரத்தில் ஊரில் குடுகுடுப்பைக்காரன் 48 நாளில் இந்த வீட்டில் நல்ல காரியம் நடக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு பெரிய அவமானம் ஏற்படும் என்று எச்சரிக்கிறான். ஆனந்தியின் அப்பாவுக்கு இது மன கஷ்டத்தை ஏற்படுத்த ஜோசியக்காரரை அழைத்து நடந்ததை சொல்கிறார்.
ஜோசியக்காரரும் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தி பரிகார பூஜை பற்றியும் சொல்கிறார். இது குறித்து பேச ஆனந்தியின் அப்பா ஆனந்தியை பார்ப்பதற்காக சென்னைக்கு கிளம்புகிறார். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியின் அப்பா நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்று ரெஜினா மற்றும் காயத்ரியிடம் ஆனந்தி எங்கே என கேட்பது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
அதே மாதிரி மகேஷின் அம்மா அன்புவின் அம்மாவை ஒரு மார்க்கெட்டில் பார்த்துவிட்டு எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் ஆனந்தியை உங்க வீட்ல தான தங்க வச்சிருக்கீங்க என எதிர்ச்சியாக கேட்பது போல் போட்டுக் கொடுத்து விடுகிறார்.
அன்புவின் அம்மாவுக்கு ரொம்பவும் கோபமாக வீட்டிற்கு வந்து ஆனந்தி இருக்கிறாளா என தேடி அவளை பார்த்து விடுவது போலவும் இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு அம்மா ஆனந்தியை கண்டுபிடிக்கிறாரா, ஆனந்தியின் அப்பாவுக்கு அவள் அன்பு வீட்டில் தங்கியிருப்பது தெரிந்து விடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.