Biggboss 8: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் கடந்த சீசனில் அவர் பாராபட்சமாக நடந்து கொண்டார் என கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதன் காரணமாக அரசியல் மற்றும் சினிமா பணி இருப்பதாக கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகினார் கமல். அதன் பிறகு விஜய் சேதுபதி அந்த இடத்திற்கு வந்தார். இதை ஆடியன்ஸ் ஆரம்பத்தில் வரவேற்றனர்.
அதேபோல் முதல் இரண்டு வாரங்கள் விஜய் சேதுபதி போட்டியாளர்களை ரோஸ்ட் செய்ததற்கு நெட்டிசன்கள் ஃபயர் விட்டு கொண்டாடினார்கள். ஆனால் இப்போது பார்த்தால் விஜய் சேதுபதியை எலிமினேட் செய்யுங்கள் என பிக்பாஸ்க்கு கோரிக்கை வைக்கின்றனர்.
விஜய் சேதுபதிக்கு எதிராக கிளம்பிய விமர்சனம்
அது மட்டுமா ஆண்டவரே இப்பதான் உங்க அருமை தெரியுது நீங்களே வந்து நிகழ்ச்சியை நடத்துங்க என அழைப்பு விடுக்கின்றனர் இதற்கு முக்கிய காரணம் ஆடியன்ஸ் கேட்க நினைக்கும் கேள்விகளை விஜய் சேதுபதி கேட்கவில்லை என்பதுதான்.
பல நேரங்களில் அவர் போட்டியாளர்களை ரொம்பவும் ரோஸ்ட் செய்யாமல் கடந்து விடுகிறார். இதுதான் பார்வையாளர்களின் குற்றச்சாட்டு. உண்மையில் ஆறு வருடங்களாக சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டு சென்ற ஆண்டவரே கடந்த சீசனில் தடுமாறி விட்டார்.
அப்படி இருக்கும் போது விஜய் சேதுபதிக்கு இதுதான் முதல் சீசன். அதேபோல் நிகழ்ச்சி தயாரிப்பு டீம் சொல்வதையும் கேட்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. அதனால் போகப்போக அவர் சரியாக கொண்டு சென்று விடுவார் என ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
ஆனாலும் அவருக்கு எதிரான கருத்துக்கள் பரவிக் கொண்டு தான் இருக்கிறது. மேலும் கமல் பேசும்போது போட்டியாளர்கள் எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு அவருடைய பேச்சு இருக்கும். ஆனால் விஜய் சேதுபதி பிரண்ட்லியாக நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். இதுவும் இந்த விமர்சனத்திற்கு ஒரு காரணம்.