விஜய் தொடங்கிய கட்சி பெயர், கொடி, கொடியின் நிறம் என அனைத்துமே இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுள்ளது. நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்த விஜய் சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனஅறிவித்து ஒரு பெரும் மாநாட்டை நடத்தி விட்டார்.
2023-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடிகர் விஜய்யின் தவெக கட்சி கொடி வைக்கப்பட்டுள்ளது. அப்படின்னா விஜய் அரசியலுக்கு வருவதும், அவரது கட்சி கொடி, பெயர் என எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு முன்னாடியே தெரியும்.
சிவகார்த்திகேயன் மட்டுமல்ல வெங்கட் பிரபு அப்புறம் அஜித் என பல முக்கியமான நபர்களுக்கு விஜய் கட்சி பெயர், கொடி எல்லாமே தெரிஞ்சி இருக்கிறது.
அஜித் கார் ரேசிங் கலர் காம்பினேஷன் சிகப்பு மஞ்சள், மாவீரன் படத்துல கட்சிக்கொடி அப்படியே இருக்கும். கோட் படத்துல சிவகார்த்திகேயன் ‘அண்ணனுக்கு ஏதோ வெளியில பெரிய வேலை இருக்கு’ அப்படின்னு சொல்ற டயலாக் எல்லாமே முன்னாடியே தெரிஞ்சதுனால மட்டும்தான்.
அப்ப புரியல ஆனா இப்ப புரியுது அப்படின்னு மாவீரன் படத்துல இருக்கிற கொடி புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.