Sivakarthikeyan : அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் கேரியர் மிகப் பெரிய அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த படம் நல்ல வசூலை பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ் உடன் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு டான் என்ற ஹிட் படத்தை கொடுத்த சி பி சக்கரவர்த்தியுடன் ஒரு படம் இருக்கிறது. இந்நிலையில் சுதா கொங்கராவுடன் சிவகார்த்திகேயன் புறநானூறு என்ற கதையில் நடிக்க இருந்தார். ஆனால் இப்போது சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது இன்று இந்த படத்தின் டெஸ்ட் சூட் நடக்க இருந்ததாக உள்ள நிலையில் அது ரத்து ஆகிவிட்டது. புறநானூறு படத்திற்காக சிவகார்த்திகேயனின் தாடியை ட்ரிம் செய்ய உள்ளார் சுதா. ஆரம்பத்தில் தாடியுடன் இருந்தால் போதும் என்று சொல்லிவிட்டு இப்போது ட்ரீம் செய்ய சொன்னதாக இருவர் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் இடையே மோதலா.?
பருத்திவீரன் பட கார்த்தி போல இருந்தால் எப்படி டெஸ்ட் சூட் எடுப்பது என சுதா கொங்கரா கேட்க அங்கிருந்து சிவகார்த்திகேயன் கோபமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படம் பாதியிலேயே நின்றதாகவும் பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.
ஆனால் வேண்டுமென்றே சிவகார்த்திகேயனின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற இவ்வாறு வதந்தி கிளப்பி வருகின்றனர். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் புறநானூறு படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் இவ்வாறு பரப்பி வருவதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வந்ததால் பல சவால்களை சிவகார்த்திகேயன் சந்தித்திருக்கிறார். இந்த சூழலில் இப்போது ஒரு நல்ல வளர்ச்சி அடைந்து வரும் நேரத்தில் அவரின் காலை வாரி விட பல வேலைகள் நடந்து வருவதாக அவரது சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.