சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

6 மாத போராட்டம், ஐசியூவில் சிகிச்சை, கை மீறி போய் விட்டதாக கலங்கிய மகள்.. நேத்ரனுக்கு என்ன தான் ஆச்சு?

Nethran: சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமாகிவிட்டார் என்ற செய்தி தான் நேற்றைய நாள் முடியும் தருவாயில் சமூக வலைத்தளங்களில் வைரலான விஷயம். விஜய் டிவியின் பொன்னி சீரியல், கலைஞர் டிவியின் ரஞ்சிதமே சீரியல் சமீப காலத்தில் நடித்து வந்து கொண்டிருந்தார் நேத்ரன்.

இவரை ஆரம்ப காலகட்டங்களில் இருந்து பார்த்தவர்களுக்கு, இவரிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது, ஆள் வேற மாதிரி இருக்கிறாரே என சீரியலை பார்த்துக் கொண்டிருக்கும்போது தெரிந்திருக்கும். அவ்வப்போது தன் மகள் அபிநயாவுடன் ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போட்டுக் கொண்டிருப்பார்.

நேத்ரனுக்கு என்ன தான் ஆச்சு?

அதை தொடர்ந்து இவர் எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என சில மாதங்கள் தெரியாமல் இருந்தது. அப்போதுதான் அவருடைய மகள் அப்பாவுக்கு கேன்சர் பாசிட்டிவ், சர்ஜரி செய்து விட்டோம். இப்போது கேன்சர் கல்லீரலுக்கு பரவி இருக்கும் என சந்தேகத்தில் மீண்டும் ஐ சி யூ வில் சேர்த்து இருக்கிறார்கள்.

எல்லாமே கைமீறி போய்விட்டது அப்பாவுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என உருக்கமான பதிவை போட்டிருந்தார். இந்த நிலையில் தான் நேற்று நேத்ரன் உயிரிழந்திருக்கிறார். 90ஸ் கிட்ஸ்களுக்கு நேத்திரனை மருதாணி சீரியலில் இருந்தே தெரியும்.

சீரியலில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தன்னுடன் நடித்த தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பிறக்கும் வரை சீரியலில் நடித்துக் கொண்டிருந்த தீபா அதன் பின்னர் மீடியாவில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

இன்னும் நேத்ரனை பரீட்சையமாக தெரிய வேண்டும் என்றால் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி, மற்றும் பாய்ஸ் vs கேர்ள்ஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு தான் தெரியும். அப்பாவும் பெண்ணும் ஆட்டத்தில் மேடையை அலற விட்டிருப்பார்கள்.

Nethran daughters
Nethran daughters

நடிகர் என்பதை தாண்டி நேத்திரன் நன்றாக நடனமாட கூடிய வரும் ஆவார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ஏற்கனவே மூத்த மகள் அபிநயாவுக்கு மீடியாவில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்து விட்டது.

இரண்டாவது மகள் அக்ஷயா டாடா இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். நேத்ரனின் மனைவி தீபா சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியல் மற்றும் விஜய் டிவியின் முத்தழகு சீரியலில் நடித்து வருகிறார்.

Trending News