சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சிங்கப்பெண்ணில் கலைந்த கரு, மாட்டிக்கொண்ட ஆனந்தி.. அன்பு வாழ்க்கையை புரட்டி போடப் போகும் சம்பவம்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நேற்றைய எபிசோடு யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இருந்தது. உண்மையை சொல்ல போனால் அன்புவின் அம்மா மீது சீரியல் பார்ப்பவர்களுக்கே அதிக கோபம் வரும் அளவிற்கு அவர் நடந்து கொண்டார்.

தண்ணீர் டேங்கில் ஒளிந்திருக்கும் ஆனந்தி எப்படியும் வெளியில் வந்து தான் ஆக வேண்டும் என மோட்டாரை போட சொல்லிவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். ஆனந்திக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் யாழினி மட்டும் குட்டி போட்ட பூனையாக சுற்றிக் கொண்டே இருந்தாள்.

கடவுள் போல் அன்பு சரியான நேரத்தில் வரவும் அவனிடம் நடந்த எல்லாத்தையும் சொல்கிறாள். அன்பு, ஆனந்திக்கு வேற உடம்பு சரியில்லையே தண்ணிக்குள்ள மாட்டிக்கிட்டு இருக்காங்களா என்ன பண்றதுன்னு தெரியலையே என வேகமாக மாடிக்கு ஓடுகிறான்.

அன்பு வாழ்க்கையை புரட்டி போடப் போகும் சம்பவம்

தன் அம்மா தடுத்தும் நிற்காமல் ஓடிப்போய் மோட்டரை ஆஃப் பண்ணிவிட்டு தண்ணி டேங்க்கை திறந்து ஆனந்தியை மேலே தூக்குகிறான். தண்ணிக்குள்ள மாட்னதும் வெளியே வர வேண்டியதுதானே ஏன் இப்படி பண்றீங்க ஆனந்தி என ஆதங்கமாக கேட்கிறான்.

எனக்கு உதவி பண்ண போய் நீங்க எந்த பிரச்சனையையும் மாட்டிக்க கூடாது அன்பு என்று ஆனந்தி சொல்கிறாள். அன்புவின் அம்மா அன்பு விடம் என்னடா இதெல்லாம் என்று கேட்கிறார். எல்லாம் தெரிஞ்சு தானே நீ இந்த மாதிரி பண்ணுன, அப்புறம் என்ன என்கிட்ட வந்து என்னடான்னு கேக்குற என ரொம்பவும் கோபத்துடன் அன்பு சொல்கிறான்.

மகேஷ் சார் ஆனந்திக்கு அடைக்கலம் தர சொன்னதால்தான் ஆனந்தியை இங்கே தங்க வைத்தேன் என சொல்கிறான். இந்த பொண்ணு இந்த வீட்ல வச்சுக்கிட்டு நீ என்ன எல்லாம் பித்தலாட்டம் பண்ண உன்னை நான் இப்படியா வளர்த்தேன் என்று அவனுடைய அம்மா ரொம்பவும் கோபப்படுகிறார்.

ஆனந்தியின் முடியை பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு கீழே வருவது போல் காட்டப்பட்டு இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தியை ஹாஸ்டலுக்கு கூட்டிக்கொண்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் வார்டனிடம் இவளால் என்னுடைய குடும்பத்தின் நிம்மதியே போச்சு என ரொம்பவும் கோபமாக சொல்கிறார்.

அதே நேரத்தில் காயத்ரி எதனால் ஆனந்தி ஹாஸ்டலுக்கு லேட் ஆக வந்தால் என்ற உண்மையை சொல்லி விடுகிறாள். என்ன தான் எல்லோரும் சமாதானப்படுத்தினாலும் ஆனந்தியின் அப்பாவுக்கு தன்னுடைய மகள் எப்படி கஷ்டப்படுவதை கேட்டபோது மனம் நெருடலாக இருக்கிறது.

இனி அவர் ஆனந்தியை ஊருக்கு வா என கூட்டிட்டு போக கூட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக காட்டப்பட்டு கொண்டிருப்பதால் இந்த தண்ணி டேங்க்குள் மாட்டிக் கொண்டு தவித்ததில் அவளுக்கு கரு கலைந்தது போல் கூட கதையை நகர்த்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

எது எப்படியோ ஆனந்தி மற்றும் அன்புவின் நடவடிக்கைகளை பார்த்த பிறகு கண்டிப்பாக அன்புவின் அம்மா துளசியை திருமணம் அன்புவுக்கு திருமணம் செய்து வைக்க அடுத்த கட்ட முடிவை எடுக்கப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

Trending News