2008 ஆம் ஆண்டு 35 கோடியில் எடுக்கப்பட்ட படம் தசாவதாரம். கமல் 10 வேடங்களில் நடித்து மிரட்டியிருந்தார். கே. எஸ்.ரவிக்குமார் இயக்கினார்.
இப்படத்தின் பிரமாண்டமும், கமல் இதில் எப்படி 10 வேடங்களில் நடித்தார் என பேசப்பட்டது. முக்கியமாக ராஜா வேடத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். அவர் யானை மீது அமர்ந்திருக்கும் காட்சியும் பாடல் காட்சியும் மறக்க முடியாது.
யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார் நெப்போலியன். அப்போது தசாவதாரம் படம் பற்றிப் பேசினர்.
அப்பவே ஒரு பாட்டுக்கு மட்டும் 18 கோடி செலவு
அதில், கல்லை மட்டும் கண்டால் அந்த பாடல் மேகிங் இப்ப யோசிக்கும் போது எப்படி இருந்துச்சு என்று தொகுப்பாளர் கேட்டார்.
அதற்குப் நெப்போலியன், ’’இந்தப் படத்துல இந்த ராஜா கேரக்டருக்கு நீங்க நடிச்சா தான் நல்லா இருக்கும். நீங்க தான் பொருத்தமா இருப்பீங்கன்னு கமல் சார் சொன்னாரு.
அந்தப் படத்துல 20 நிமிஷம் தான் அந்தப் போர்சனே. அந்த பீரியட் ஷூட்டுகாக, அந்தக் காலத்திலயே, 12 வருஷம் முன்னாடியே 18 கோடி செலவு செய்தார் கமல்’’ என்று கூறினார்.
கமல் ஒரு முன்னோடி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமானது. ஷங்கர், ராஜமெளலி போன்ற இயக்குனர்கள் பிரமாண்டமாக படம் எடுக்கின்றனர். கமலும் அதை சைலண்டாக செய்து அதிலும் வெற்றி கண்டார். அதற்கு தசாவதாரம் ஒரு உதாரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.