சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரஞ்சித் சாச்சனாவையும் காப்பாற்றி வரும் பிக் பாஸ், காரணம் இதுதான்.. கேப்டன் பொறுப்பை ஏற்கும் போட்டியாளர்

Vijay Tv Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் மக்களிடத்தில் பலதரப்பட்ட கருத்துக்களை பெற்றாலும், எதற்கும் அசராமல் வருஷத்துக்கு ஒரு முறை 100 நாள் வேலை இல்லாத திட்டத்தை அறிவித்தது போல் ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார்கள்.

இதில் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும், யாருக்கு அதிக ஓட்டு போடுவது என்று சில விஷயங்கள் மக்கள் கையில் இருந்தாலும் அதற்கு பின்னணியில் இருந்து முழுக்க முழுக்க வேலை செய்வது சேனல் தரப்பில் இருப்பவர்கள் தான். அதனால் தான் மக்கள் ஓட்டு போடும் நபரும் ச,ரி விஜய் டிவி தேர்ந்தெடுக்கும் நபரும் சரி ஒன்று போல தான் வெற்றி பெற்று வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த சீசனில் முத்துக்குமார்க்கு அதிகளவு மக்களின் ஓட்டு கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த வாரம் ஏஞ்சல் VS டேவில் டாஸ்க் மூலம் தீபக் அவருடைய திறமையை வெளிக்காட்டி மக்களிடத்தில் அவருக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

இவர்களை தொடர்ந்து தற்போது ராணவிற்க்கு மக்களிடத்தில் அதிக சப்போர்ட் கிடைக்க ஆரம்பித்து விட்டது. மேலும் பிக் பாஸ் வெற்றியின் சூட்சுமம் படி இந்த சீசனில் ராணவ் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இன்னும் 30 நாட்கள் இருக்கும் நிலையில் விஜய் டிவி பிளான் பண்ணி ராணவிற்க்கு முதலிடம் கிடைக்கும் படி கொண்டு வந்து விடுவார்கள்.

இதற்கு இடையில் சாச்சனாவை வெறுத்து வரும் மக்கள், ஒவ்வொரு வாரமும் எலிமினேட் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கம்மி ஓட்டுகளை பெற்று இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தினால் சாச்சனா தப்பித்து விடுகிறார். இதற்கு காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியிருக்கிறது.

அதாவது ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் போவது வழக்கம். அதே மாதிரி இந்த சீசனில் சாச்சனாவின் குடும்பத்தை எப்படியாவது உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக எலிமினேட் பண்ணாமல் வைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் டாப் 5 இடத்திற்கு வரை சாச்சனாவை கொண்டு போக வேண்டும் என்று பிக் பாஸ் இன் குருநாதர் சில கமுக்கமான வேலைகளை பார்த்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக எல்லாரையும் அன்பாக கூப்பிட்டு பாசமாக பேசுவது போல் சாமி, ஐயா, கண்ணு என்று ஒரு முகத்திரையை போட்டு வரும் ரஞ்சித்தும் இதுவரை காப்பாற்றப்பட்டு வருகிறார்.

இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்றால் ரஞ்சித் மனைவியையும் மகன்களையும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் பிளான் பண்ணி வைத்திருக்கிறது. அதனால் தான் அடுத்த வாரம் கேப்டன் பொறுப்பை ரஞ்சித்துக்கு தூக்கிக் கொடுத்திருக்கிறது.

இதற்கு அடுத்தப்படியாக போட்டியாளர்களின் குடும்பங்கள் உள்ள போகப் போகிறார்கள். அப்படி ரஞ்சித் குடும்பம் போன பிறகு ரஞ்சித் எலிமினேட் ஆனது போல் காட்டி வெளியே அனுப்பி விடுவார்கள்.

Trending News