தென்மேற்கு வங்கக் கடலில் ஃபெஞ்சல் புயலால் தழிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன.
ஃபெஞ்சல் புயலால் தமிழ் நாட்டில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு 2 ஆயிரம் கோடி நிவரண தொகை அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி கடிதம் எழுதினார்.
புயல் பாதிப்பு நிவாரண பணிக்காக ரூ.994.80 கோடி வழங்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
விஜய், சிவகார்த்திகேயனை அடுத்து உதவிய கார்த்தி!
தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிவாரண நிதி அளித்திருந்தார்.
இன்று கார்த்தி 15 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதியிடம் வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் தளத்தில், “ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை, 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப்பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ நடிகரும் – உழவன் அமைப்பின் நிறுவனருமான சகோதரர் கார்த்தி அவர்கள் ரூபாய் 15 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்” என்று தெரிவித்துள்ளார்.