ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2 வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. அடிலெய்டில் நடந்த இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் சதம் அடித்தார். அந்த அணி 337 ரன்கள் குவித்தது. இதனால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் முன்னிலை வகித்தது.
2வது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி சனிக்கிழமை ஆட்டம் நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்தனர். இன்று 3 வது நாள் ஆட்டத்தில் 175 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்., அணிக்கு 19 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்., அணி 3.2 ஓவர்களில் எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்திய அணி தோற்றதற்கான காரணம்:
முதல் இன்னிங்ஸ் மாதிரி 2வது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் களத்தில் நிலைத்து நின்று ஆடவில்லை.
மூத்த வீரர்களான கோலி, ரோஹித் சர்மா இருவரின் பேட்டிங்கும் ஏமாற்றம் அளித்தது. பிங்க் பந்து எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து வீர்கள் எச்சரிக்கையுடன் சரியாக விளையாடவில்லை.
இந்திய வீர்களின் பந்து வீச்சும் சரிவர எடுபடவில்லை. இவைதான் இந்திய அணின் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்கர்கள் கூறி வருகின்றனர்.