புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா செல்வதற்கான வாய்ப்புகள்.. பாயிண்ட்ஸ் டேபிள் என்ன சொல்கிறது

ஆஸ்திரேலியா உடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. இனிவரும் போட்டிகளில் இந்தியா எப்படி விளையாடினால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என்பதை பார்க்கலாம் .

அடிலெய்டு டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் உலகக் கோப்பை புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா 57.29 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு சென்றது..இதனால் இரண்டாவது இடத்திலிருந்து ஆஸ்திரேலியா 60.71 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு சென்றது.

இனி விளையாடப் போகும் மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டில் வெற்றி பெற்று ஒன்றை டிரா செய்ய வேண்டும். .ஒரு போட்டியில் தோற்றால் கூட இந்தியா வெளியேறிவிடும்.

மீதமுள்ள போட்டிகளில் ஆஸ்திரேலியா ஒன்றை வென்றால் கூட இறுதி போட்டிக்கு முன்னேறி விடும். இந்தியா 57 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும்,.தென்னாப்பிரிக்கா 59 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும் ஆஸ்திரேலியா 60 புள்ளியில் பெற்று முதல் இடத்திலும் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றால் இரண்டாவது இடத்திற்கு சென்று விடும்.இந்தியா இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இனிவரும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

- Advertisement -

Trending News