இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெறவுள்ளதாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. சமீபத்தில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியா வாஷ் அவுட் ஆனது.
இது பிசிசிஐக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம் அளித்தது. இது, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு இந்தியா நுழைய தடையாக அமைந்தது.
அதன்பின், ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் ஜெயித்தது. இதற்குப் பதிலடியாக 2 வது டெஸ்ட்டில், ஆஸ்., 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இளம் வீரர்களுக்கு வழிவிட்டு மூத்த வீரர்கள் ஓய்வு?
தனிப்பட்ட காரணங்கலால் ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட்டார்.
2 வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்ட போதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லுமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என குரல் எழுந்து வருகிறது.
அதேபோல் விராட் கோலி முதல் டெஸ்ட்டில் சதம் அடித்தார். 2வது போட்டியில் சோபிக்கவில்லை.
எனவே இளம் வீரர்களுக்கு வழிவிட்டு, இத்தொடர் முடிந்த பின், ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் ஓய்வை அறிவிக்கலாம்? என கூறப்படுகிறது. இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.