வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்தியன் 2 ஊத்திக்கிட்டதால் ஜெய்லர் 2க்கு நெல்சன் போட்ட கண்டிஷன்.. ஆட்டம் கழண்டு போய் நிற்கும் கலாநிதி

Director Nelson: பொதுவாக சில பெரிய படங்களுக்கு எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றி கிடைத்து விட்டதால் உடனே அதனுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால் இரண்டாம் பாகத்திற்கு ஏகப்பட்ட வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து இருப்பதால் என்னமோ அந்த இரண்டாம் பாகம் தோற்றுப் போய் விடுகிறது. இதற்கு உதாரணமாக எத்தனையோ படங்கள் இருந்தாலும் சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் 2 படத்தை சொல்லலாம்.

இப்படத்தை பார்ப்பதற்கு எக்கச்சக்கமான மக்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் படம் வெளியாகி இப்படி ஒரு மட்டமான படத்தை நாங்கள் பார்த்ததே இல்லை என்று கழுவி ஊத்தும் அளவிற்கு விமர்சனங்களை பெற்றுவிட்டது. இதனால் பெரிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இனி எடுக்கப் போகும் இரண்டாம் பாகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.

இந்த லிஸ்டில் இயக்குனர் நெல்சனும் தெளிவாகியுள்ளார். அதாவது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் பக்கம் மாசாக வெற்றி பெற்று கிட்டத்தட்ட 650 கோடிக்கு மேல் வசூலை சம்பாதித்து கொடுத்தது. அந்த வகையில் இதனுடைய இரண்டாம் பாகமும் எடுப்பதற்கு தயாராகி விட்டார்கள்.

ஆனால் இந்த சூழ்நிலையில் நெல்சன் போட்ட கண்டிஷன் என்னவென்றால், குறைந்தது 13 மாதமாவது எனக்கு ஜெயிலர் 2 படத்தை முடிப்பதற்கு டைம் வேண்டும் என்று கலாநிதி மாறன் இடம் சொல்லி விட்டார். ஆனால் சன் பிக்சர்ஸ், ஜெயிலர் 2 அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்று முடிவு பண்ணி வைத்திருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில் எதிர்பார்க்காத அளவிற்கு நெல்சன் குண்டைத் தூக்கிப் போட்டு விட்டார். அந்த வகையில் எப்படியும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதத்தில் தான் ஜெயிலர் 2 படத்தை எதிர்பார்க்க முடியும். அத்துடன் நெல்சன் எடுத்திருக்கும் இன்னொரு முடிவு என்னவென்றால் இனி எந்த படமாக இருந்தாலும் கார்ப்பரேட் கம்பெனி தயாரிக்கும் படங்களில் தான் இயக்க வேண்டும் என்று முடிவு பண்ணி வைத்திருக்கிறார்.

ஏனென்றால் சின்ன சின்ன படங்கள் எடுத்தால் அதில் ஏகப்பட்ட பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் சந்திக்க வேண்டும். இதனால் தேவையில்லாத சில படங்கள் டிராப் ஆகி பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தி விடும் என்பதால் நெல்சன் உஷார் ஆகிவிட்டார். இன்னொரு பக்கம் தயாரிப்பிலும் இறங்கிய நெல்சன் கவினை வைத்து தயாரித்த பிளடி பர்கர் படமும் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. இதனால் அடுத்து வைக்கிற ஒவ்வொரு படியும் கவனமாக இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி வைத்திருக்கிறார்.

Trending News