Ethirneechal 2: அண்ணன் எப்போ எந்திரிப்ப, திண்ணை எப்போ காலியாகும் என்ற சொலவடை கிராமப்புறங்களில் அதிகமாக சொல்வது உண்டு.
அப்படித்தான் சீரியல்களின் டிஆர்பி பஞ்சாயத்தும். எந்த சீரியலில் அந்த வாரம் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கிறது அந்த சீரியல்தான் டிஆர்பியில் முதல் இடத்தை பிடிக்கும்.
அப்படி சீரியல்களில் உச்சத்தில் இருந்த தொடர் என்றால் அது சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியல்தான்.
கோலங்கள் சீரியலுக்குப் பிறகு இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய தரமான தொடர் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை ஆண்கள் கூட விரும்பி பார்த்ததற்கான காரணம் அதில் ஆதி குணசேகரன் கேரக்டரி நடித்த நடிகர் மாரிமுத்து தான்.
கதையின் போக்கையே மாற்றிய சிங்கப்பெண்ணே!
மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு கதைக்களம் கொஞ்சம் டல்லாகி சீரியல் முடிவுக்கு வந்தது. எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து இருக்கும் வரைக்கும் டிஆர்பி யில் அந்த சீரியல்தான் கிங் ஆக இருந்தது.
அதற்கு பிறகு தான் சிங்க பெண்ணே மற்றும் கயல் போன்ற சீரியல்கள் எல்லாம். அதிலும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா மற்றும் நந்தினி காம்போ எல்லோருக்கும் மிகப் பிடித்த ஒன்று.
மற்ற சீரியல்கள் எல்லாம் எதார்த்த களத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் உண்மையாகவே வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த மாதிரியான சூழ்நிலைகளை கையாளுகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டி இருப்பார்கள்.
இதனாலேயே இல்லத்தரசிகளிடம் இந்த சீரியல் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்க இருப்பதால் மற்ற சீரியல்கள் எல்லாம் கொஞ்சம் கலக்கத்தில் தான் இருக்கின்றன.
சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்ட சிங்க பெண்ணே சீரியல் இயக்குனர் இனி அரச்ச மாவையே அரச்சா வேலைக்கு ஆகாது என்று உணர்ந்து கதை களத்தையே மாற்றி விட்டார்.
இதுவரை முக்கோண காதல், நான்கு பக்க காதல் என சலிப்பு தட்டிக் கொண்டிருந்த சீரியல் இன்றிலிருந்து வேறொரு கதை களத்தில் நகரை இருக்கிறது.
அன்புவை நம்பி பெரிய ஆர்டரை கையில் எடுக்கும் மகேஷ், அன்பு இதை முடித்து காட்டி விடக்கூடாது என சதி திட்டம் தீட்டும் கருணாகரன், மித்ரா என்று நகர இருக்கிறது இந்த கதை.
அது மட்டும் இல்லாமல் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து கொண்டிருந்த ஆனந்தியை தையல் மிஷினில் அன்பு உட்கார வைப்பதும், ஆனந்தியால் இது முடியாது என கருணாகரன் சவால் விடுவதும், என்னால் முடியும் என்று ஆனந்தி பதிவு சவால் விடுவதும் என கதைக்களம் சூடு பிடித்திருக்கிறது.