அடிலைட் பெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படு தோல்வி அடைந்தது. இதனை வைத்து தான் இப்பொழுது பல பேர் நாட்டாமை செய்து கொண்டிருக்கிறார்கள். சில வீரர்கள் இதுதான் சந்தர்ப்பம் என இந்திய அணியையும், வீரர்களையும் வார்த்தையால் கொட்டுகிறார்கள்
இந்திய அணி 20 ஓவர் சாம்பியன் பட்டம் வென்றதிலிருந்து பல அணிகள் பொறாமையில் பொங்கி வருகிறது. குறிப்பாக இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மற்ற அணியினருக்கு பயத்தை மட்டுமில்லை, இந்திய அணி மீது வஞ்சகத்தையும் உருவாக்கி வருகிறது.
ரோகித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடக்கூடிய சிறந்த வீரர். பல பாஸ்ட் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். இதனாலையே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், போன்ற அணிகள் எப்பொழுதுமே அவரை மட்டம் தட்டி பேசுவதில் அலாதிய ஆர்வம் கொண்டு உள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் சில போட்டிகளில் ரன் அடிக்கவில்லை இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இஷ்டத்துக்கு பேசி வருகிறார்கள். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா முன்னாள் நட்சத்திர வீரர் டேரில் களினன்,ரோகித் சர்மாவிற்கு ஃபிளாட் ட்ராக்கை காட்டுங்கள் சென்ஜூரி அடித்து தள்ளுவார் என கிண்டல் அடித்துள்ளார்.
ரோஹித் சர்மாவுக்கு பிட்னஸ் பிரச்சனை இருக்கிறது. இந்திய மண்ணில் மட்டுமே அவர் விளையாடுகிறார். வெளிநாட்டு டூர்களில் அவருக்கு ஆட தெரியவில்லை, இப்பொழுதும் அதே பிரச்சினையில் தான் ஆஸ்திரேலியாவுடன் தடுமாறுகிறார். தென் ஆப்பிரிக்கா வந்தபோதும் கூட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் சோபிக்கவில்லை.
சவால் நிறைந்த வேகப்பந்து பிட்ச்சில் ரோகித் சர்மா தினருகிறார். அவருக்கு ஆட தெரியவில்லை. அவர் எளிதில் விக்கெட்டை பறிகொடுத்து விடுகிறார் என பேசியிருக்கிறார். அது மட்டும் இன்றி தான் ஒரு அணியின் கேப்டனாக இருந்தால் ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்குஅணியில் இடம் கொடுக்க மாட்டேன் என தரக்குறைவாக பேசியுள்ளார்.