Rajinikanth: நான்கு தலைமுறைகளை தாண்டிய நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். என்றும் அவரை நம்பி ஆயிரம் கோடி முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினி படத்தின் வசூலுக்குப் போட்டி அவருடைய அடுத்த படமாக தான் இருக்கும். அப்படி ரஜினியின் நடிப்பில் வெளியாகி பெரிய லாபத்தை பார்த்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.
காட்டுத்தனமாக வேட்டையாடிய டாப் 5 படங்கள்
பேட்ட: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து 2019 ஆம் ஆண்டு ரிலீசான படம் பேட்ட. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதால் பெரிய அளவில் படம் எதிர்பார்க்கப்பட்டது.
160 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 223 கோடி வசூல் செய்தது.
கபாலி: அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் ரஜினியுடன் கூட்டணி வைத்தார்.
இவர்கள் கூட்டணியில் உருவான கபாலி படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவானது. இந்த படத்தின் வசூல் 295 கோடி.
எந்திரன்: இயக்குனர் சங்கர் கூட்டணியில் ரஜினி நடித்த படம் தான் எந்திரன்.
இந்தப் படம் ரஜினியின் சினிமா கேரியரில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. 150 கோடியில் உருவான இந்த படம் 290 கோடி வசூலித்தது.
2.O: எந்திரன் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி 2.0 படத்தில் இணைந்தார்கள். இந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 600 கோடி வசூலித்தது.
ஜெயிலர்: சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரஜினிகாந்த்துக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்த படம் ஜெய்லர். 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 650 கோடி வசூலித்தது.