ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோஹித் சர்மா தலைமையில் 2வது போட்டியில் மோசமாய் விளையாடிய இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா எளிதாக வென்றது
அதனால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்இப்பொழுது இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து சமநிலையில் இருக்கிறது .டெஸ்ட் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற அடுத்த போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இருக்கிறது இந்திய அணி.
சமீபகாலமாக இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி நியூசிலாந்து தொடரிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் சோபிக்கவில்லை. இதனால் பல விமர்சனங்களுக்கு ஆளான விராட் கோலி முதல் டெஸ்டில் சதத்தை அடித்து பதிலடி கொடுத்தார். ஆனால் மீண்டும் அடுத்தடுத்த போட்டிகளில் தடுமாறி வருகிறார்
இந்நிலையில் அவர் தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டுமென்றால், 2004 ஆம் ஆண்டு சிட்னி போட்டியில் சச்சின் அடித்த 241* ரன்கள் ஆட்டத்தை பார்த்து, விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கில்கிறிஸ்ட் அறிவுரை வழங்கியுள்ளார்.
இப்போதைய விராட் கோலி போல அந்தத் தொடரில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் சச்சின் தொடர்ந்து அவுட்டானார். அதனால் தமக்கு மிகவும் பிடித்த கவர் டிரைவ் அடிக்காமலேயே நேர்த்தியாக விளையாடிய சச்சின் ஆஸ்திரேலியாவை நோகடித்து 241* ரன்கள் குவித்தார். எனவே இப்போது இந்தியாவை காப்பாற்ற விராட் கோலி அதே போன்ற ஆட்டத்தை கையில் எடுக்க வேண்டுமென்று கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.