ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என்ன joke காட்டுறீங்களா.? நீதிபதியையும் விட்டு வைக்காத சிம்பு

நடிகர் சிம்பு வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவிருந்தார். வெந்து தணிந்தது காடு படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் சிம்புவுக்கு அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் வர, கொரோனா குமார் படத்தில் நடிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்தார். இதனால் படம் கைவிடப்பட்டது. படம் துவங்குவதற்கு முன், சிம்புவுக்கு அட்வான்ஸ் தொகையாக 4 கோடியை கொடுத்திருந்தார் ஐசரி கணேஷ்.

ஆனால் சிம்பு அந்த பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதில் கடுப்பான ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. தான் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திரும்ப தருவதோடு, வேறு படத்தில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று.

இது மீண்டும் சிம்புவுக்கு ஒரு தலைவலியாக மாறியது. நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில், முதலில் சிம்புவை 1 கோடி ரூபாய்க்கான உத்தரவாத தொகை டெபாசிட் செய்ய சொல்லி உத்தரவிட்டது.

அதன்படி சிம்புவும் டெபாசிட் செய்தார். இந்த வழக்குக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை தான் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

நீதிமன்றத்திடம் வட்டி கட்ட சொன்ன சிம்பு

இதற்க்கு நடுவில், இருதரப்பினரும் பேசி ஒரு முடிவுக்கு வந்து சமாதானம் ஆகிவிட்டார்கள். இப்படி இருக்க நேற்றைய தினம் இந்த கேஸ் மத்தியஸ்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை இரு தரப்பினரும் திரும்ப பெற்றுக்கொள்வதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். இதை தொடர்ந்து கேஸ் முடித்து வைக்க பட்டது.

மேலும் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்த 1 கோடி ரூபாயை திரும்ப வட்டியுடன் தரவேண்டும் என்று கேட்டு கொண்டனர். அதற்க்கு நீதிமன்றம் ஒப்புக்கொண்டு வட்டியுடன் திருப்பி கொடுத்துள்ளது.

இதை தொடர்ந்து நெட்டிசன்கள், பேசாமல் நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்..எதற்கு இப்படி கோர்ட் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

- Advertisement -

Trending News