கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
2013 ல் மலையாளத்தில் பட்டம் போலே படம் மூலம் இவரது சினிமா கேரியர் தொடங்கியது.
அதன்பின், நிர்நாயக்கம், நானு மட்டு வரலட்சுமி, தி கிரேட் பாதர், பியாண் த கிளவுட்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.இப்படம் மூலம் அவர் ரசிகர்களி கவனத்தைப் பெற்றார்.
அடுத்து, விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இப்படமும் சூப்பர் ஹிட். எனவே முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தனுஷுடன் இணைந்து மாறன் படத்திலும் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்திலும் நடித்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அப்படத்தில் முக்கிய கேரக்டரில் மாளவிகா மோகன்ன் நடித்திருந்தார்.
இப்படம் கலவையான விமர்சன்ங்களைப் பெற்றது. அடுத்து, தெலுங்கு இந்தி என பல படங்களில் நடித்து வருகிறார்.
பிரபாஸுடன் இணைந்து தி ராஜா சாப் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மாளவிகா மோகனனின் இந்த போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.