ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ரஜினி, கமலுடன் நடிக்க போட்டி போட்ட 8 நடிகைகள்.. பேட்ட வரை ஜோடி போட்ட சிம்ரன்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவில் சிறு வயது முதல் நடித்து வருபவர் கமல்ஹாசன். இருவரும் மூத்த நடிகர்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் சினிமாவில் இருக்கின்றனர். இன்றும் புகழ் வெளிச்சத்தில் உள்ளனர்.

பல நூறு கோடிகளுக்கு பிசினஸ் ஆகும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் டஃப் கொடுத்து வருகின்றனர்.

இப்போதே இருவருக்கும் பிசினஸும் ரசிகர்கள் இப்படி உள்ளனர் என்றால் 80, 90களில் அவர்களின் வளர்ச்சியும், படங்களின் வெற்றி, ரசிகர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா?

இருவரும் ஹீரோவாக அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்த 70 களிலேயே, ரஜினி, கமல் இருவருடனும் நடிக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர் அப்போதைய முன்னணி நடிகைகளை புக் செய்தாக கூறப்படுகிறது.

அதேதான் 80 , 90 காலக்கட்டத்திலும் நடந்தது. எனவே, ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ராதிகா, சுமித்ரா, விஜய்சாந்தி, அமலா, ஸ்ரீவித்யா, மாதவி, ரம்யா கிருஷ்ணன் என அன்றைய முன்னணி நடிகைகள் அவர்கள் இருவருடனும் நடித்தனர்.

அதன்பின், 90-களில் மீனா, கெளதமி ஆகியோர் நடித்தனர். நடிகை சிம்ரன் மும்பை எக்ஸ்பிரஸில் கமலுடனுன், பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்தார்.

எனவே ரஜினி, கமல்ஹாசன் இருவருடன் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இத்தனை ஆண்டுகளில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே இருவருடனும் இணைந்து நடித்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Trending News