Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
நேற்றைய எபிசோடில் தான் ஆனந்தி ரியல் சிங்கப் பெண்ணாக களம் இறங்கி இருக்கிறாள். எப்படியாவது மகேஷ் அறிவித்த ஏழு லட்சம் பரிசை வாங்கி விட வேண்டும் என்பதுதான் ஆனந்தியின் நோக்கம்.
அப்போதுதான் தன் அக்காவின் திருமணம் நல்லபடியாக நடக்கும் என ஆனந்தி நினைக்கிறாள்.
அதே நேரத்தில் ஆனந்தி இந்த பரிசு வாங்கி விடக்கூடாது என மித்ரா மற்றும் கருணாகரன் முழுமூச்சில் இறங்கியிருக்கிறார்கள்.
ஆனந்தி வழுக்கி விழுந்த பிறகு கம்பெனிக்கு வர மாட்டாள் என மித்ரா நம்பினாள். ஆனால் ஆனந்தி கம்பெனிக்கு வந்ததோடு மட்டுமில்லாமல் இந்த போட்டியில் ஜெயிப்பேன் என்றும் சவால் விட்டாள்.
ஹீரோவாக களம் இறங்கும் மகேஷ்
ஆனால் நேற்றைய எபிசோடு முழக்க ஆனந்தியால் போட்டியில் முன்னேற முடியவில்லை. . முதலிடத்தில் உஷா மற்றும் இரண்டாம் இடத்தில் ஜெயந்தி தான் மூன்று ரவுண்டுகளாக இருந்து வந்தார்கள்.
கை கால் வழியோடு சேர்த்து ஆனந்திக்கு காய்ச்சலும் வந்து விடுகிறது. ஆனந்தி படும் கஷ்டத்தை பார்த்து மித்ரா மற்றும் கருணாகரன் ரொம்பவே சந்தோஷப்படுகிறார்கள்.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி போட்டியிலிருந்து விலகியது போல் காட்டப்பட்டு இருக்கிறது. அன்பு ஆனந்தியை கேன்டீனுக்கு கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கி ஊட்டி விடுகிறான்.
மேலும் மகேஷிடம் ஆனந்தியின் அக்கா திருமணத்தைப் பற்றி அன்பு தெரிவித்து இருப்பது போல் காட்டப்படுகிறது.
போன முறை நான் 10 லட்சம் கொடுத்ததற்கே ஆனந்தி அதை அழகன் தான் கொடுத்தான் என்று நினைத்து விட்டாள்.
இந்த முறையாவது அப்படி நடக்கக் கூடாது என மகேஷ் அன்பு விடம் கேட்டுக்கொள்கிறான். ஆனந்தி அக்காவின் திருமணத்திற்கும் மகேஷ் தான் காசு கொடுக்கப் போகிறான் என்பது தெரிந்து விட்டது.
அன்புவை ஹீரோவாக வைத்துவிட்டு ஆனால் அன்புவால் ஆனந்திக்கு உதவ முடியாதது போல் காட்டுவது அன்பு வை டம்மி ஆக்குவது போல் தான் இருக்கிறது.
எது எப்படியோ உடல்நிலை சரியாகி ஆனந்தி இந்த கோட்டையில் ஜெயிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.