ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

SK25‌ பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.? எகிறும் சிவகார்த்திகேயன் மார்க்கெட்

Sivakarthikeyan : அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 350 கோடியை தாண்டி இந்த படம் வசூல் செய்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஏஆர் முருகதாஸ் உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இயக்குனரின் கனவு படமான புறநானூறு படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் அதர்வா, ஜெயம் ரவி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஜெயம் ரவி தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த நிலையில் நல்ல கதாபாத்திரம் என்பதால் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் எஸ்கே 25 படத்தின் பட்ஜெட்

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ லீலா கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தின் பட்ஜெட் தான் பலரையும் வாயை பிளக்க செய்துள்ளது. அதாவது அமரன் படத்தை தொடர்ந்து பல பெரிய பட்ஜெட் படங்கள் சிவகார்த்திகேயனை தேடி வருகிறது.

இப்போது மினிமம் கேரன்டி ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறி இருக்கிறார். அதனால் தயாரிப்பாளர்கள் அவரை நம்பி பணத்தை போட முன் வந்திருக்கிறார்கள். அந்த வகையில் எஸ் கே 25 படத்தின் பட்ஜெட் 150 கோடி ஆகும்.

இதுவரை சிவகார்த்திகேயன் படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இந்த படம் அமைய இருக்கிறது. மேலும் அமரன் வெற்றியால் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

எஸ்கே 25 படத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். ஏற்கனவே சுதா கொங்கராவுடன் அவர் இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் செம ஹிட்டானது. இப்போது மீண்டும் இவர்கள் இணைவது கண்டிப்பாக ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுக்கும்.

Trending News