கமல், மணிரத்னம் என பெரும் ஜாம்பாவான்கள் கூடி சிங்கீதம் சீனிவாச ராவை புகழ்வதற்கு காரணம் என்ன?

கமல்ஹாசன் சிங்கீதம் சீனிவாசராவ் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். அவருக்கு விழா எடுத்து அவரை சிறப்பித்து வருகிறார். அவரது சிறப்புகள் குறித்து
இதில் பார்ப்போம்.

ஆந்திராவைச் சேர்ந்தவர் சிங்கீதம் சீனிவாசராவ். இவர் ஆரம்பத்தில் கே.வி.ரெட்டி, பிங்கிலி நாகந்திர ராவ் ஆகியோருடன் இணை இயக்குனராகப் பணியாற்றினார்.

அவர் இயக்கத்தில் 1972 முதல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் படங்கள் ரிலீசாகியுள்ளன.

1988 ல் அவர் புஸ்பக் என்ற மெளன படத்தை இயக்கினார். இது எல்லோராலும் பாராட்டப்பட்ட நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

தமிழில் கமல்ஹாசனுன் இணைந்து, ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், பேசும் படம் என ஒவ்வொரு படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகள் பெற்றன.

இவர் இயக்கத்தில் கமல் – சிம்ரன் நடிப்பில் கடந்த 2005 ல் வெளியான படம் மும்பை எக்ஸ்பிரஸ். இப்படி வித்தியாசமான மற்றும் மற்ற இயக்குனர்களிடம் இருந்து தனித்து பல படங்களை இயக்கியுள்ளார் சிங்கீதம் சீனிவாசராவ்.

தமிழில் திக்கற்ற பார்வதி, இரு நிலவுகள், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, லிட்டின் ஜான் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

சிங்கீதம் சீனிவாச ராவின் புகழை பரப்பும் கமல்

தற்போது 93 வயதாகும் அவரது படைப்புகள் சினிமாவுக்கு அளப்பரிய பங்களிப்பை தந்துள்ளன. இளம் படைப்பாளிகளுக்கு முன்னோடியாக உள்ளன.

எனவே அவரது திறமையைப் பற்றி கமல்ஹாசன் உலகுக்கு தெரியப்படுத்தி வருகிறார். அதன்படி, சிங்கீதம் சீனிவாசன் பற்றிய நிகழ்ச்சி யூடியூப்பில் பல எபிசோட்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

அதில், அவரது ஒவ்வொரு படங்களையும் திரையிட்டு, அதில் தான் நடித்த அனுபவம், சக நடிகர்களின் அனுபவம், பணியாற்றிய கலைஞர்களின் அனுபவங்கள் என பலரும் அதில் இடம்பெற்றுள்ளது. சிங்கீதம் சீனிவாசராவும் தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

இதில், கமல், வைரமுத்து, மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், சுஹாசினி, சந்தான பாரதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →

Leave a Comment