Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. எப்படியாவது ஏழு லட்சம் பரிசை வாங்கி விட வேண்டும் என ஆனந்தி போராடிக் கொண்டிருக்கிறாள்.
ஆனால் அதே நேரத்தில் அந்த பரிசுக்கு பின்னால் மகேஷ் போட்டிருக்கும் திட்டம் அவளுக்குத் தெரியவில்லை. நேற்றைய எபிசோடில் ஆனந்தியால் சுத்தமாக போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை.
இதை புரிந்து கொண்ட மகேஷ் எல்லோரும் சாப்பிட்டு விட்டு வாங்க, அப்புறம் போட்டி ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறான். ஜெயந்தி மற்றும் சௌந்தர்யா இருவரும் ஆனந்தியை கூட்டிக்கிட்டு சாப்பிட போகிறார்கள்.
உண்மை தெரிந்து ஆடி போன அன்பு!
அப்போதுதான் மகேஷ் அன்பு விடம் அந்த உண்மையை சொல்லுகிறான். ஆனந்தியின் அக்காவுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருப்பது தனக்குத் தெரியும் என சொல்கிறான்.
அன்பு ரொம்பவும் ஆச்சரியத்துடன் எப்படி என்று கேட்கிறான். அதற்கு ஆனந்தியை நான் காதலிப்பதை அழகப்பன் சாரிடம் சொல்ல நான் முடிவெடுத்தேன்.
அவருக்கு போன் பண்ணி பேசும்போது தான் தன்னுடைய மூத்த பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாக சொன்னார்.
அது மட்டும் இல்லாமல் அதற்கு ஏழு லட்சம் பணம் தேவைப்படுகிறது என்றும் சொன்னார். அதனால் தான் ஆனந்திக்கு இந்த பரிசை கொடுக்க வேண்டும் என நான் நினைத்திருக்கிறேன்.
கோகிலா கல்யாணம் முடிந்த கையோடு ஆனந்தியின் மீதான என்னுடைய காதலை பற்றி தெரிவிக்க போகிறேன் என்று சொல்கிறான்.
இது அன்புக்கு தலையில் இடியை இறக்கியது போல் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஆனந்தி தெம்பாக இருக்க எனர்ஜி ட்ரிங்க் ஒன்று வாங்கி கொடுக்கிறான்.
இன்று வெளியான ப்ரோமோவில் ஆனந்தி சுளுக்கு பேன்டேஜை கழட்டிவிட்டு வேகமாக தைக்க ஆரம்பிக்கிறாள்.
இது மித்ரா மற்றும் கருணாகரனுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் தைத்துக் கொண்டிருக்கும் போதே ஆனந்தி மயக்கம் போட்டு விழுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.
மீண்டும் ஆனந்தி கர்ப்பமாக இருப்பதாக கண்டன்ட் கொண்டு வரப் போகிறார்களா என தெரியவில்லை. எது எப்படியோ 7 லட்சம் ஆனந்திக்கு கிடைத்துவிடும் என்பதில் உறுதி.
இருந்தாலும் கோகிலாவை பெண் பார்த்துவிட்டு சென்றவர்கள் வரதட்சணை இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பதாக வீடு தேடி வந்து சொல்கிறார்கள்.
இதன் மூலம் ஆனந்திக்கு என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.