VTV கணேஷ்: இடம், பொருள், ஏவல் தெரிந்து பேச வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் சில நேரங்களில் சினிமா நட்சத்திரங்கள் இதிலிருந்து தவறிவிடுகிறார்கள்.
அவர்களை மீறி கேமரா முன் கோபம் வருவது, தேவையில்லாத வார்த்தைகளை பேசுவது என நிறைய சம்பவங்கள் நடக்கும்.
அப்படி ஒரு சம்பவத்தை தான் நடிகர் வி டிவி கணேஷ் செய்து இருக்கிறார்.
சிம்புவுடன் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் போடா போடி படங்களின் மூலம் ரசிகர்களிடையே அதிக பரீட்சையமானவர்.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் முசாஃபா என்னும் அனிமேஷன் படத்தில் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
புடைவையை தூக்கி கட்டும்மா
இவருடன் சேர்ந்து நடிகர்கள் நாசர், சிங்கம் புலி, ரோபோ சங்கர், அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ் போன்றவர்களும் இந்த படத்திற்கு பின்னணி பேசி இருக்கிறார்கள்.
நேற்று இந்த பட விழாவில் அத்தனை பேரும் கலந்து கொண்டார்கள். அப்போது VTV கணேஷ் மற்றும் சிங்கம் புலி இருவரும் மேடையில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளனி ஏஞ்சலின். இவர் சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வைரலாகி வருகிறார்.
விடிவி கணேஷ் பேசி முடித்துவிட்டு ஏஞ்சலினை பார்த்து முதலில் நன்றி என்று சொல்கிறார்.
அதை தொடர்ந்து புடவையை கொஞ்சம் தூக்கி கட்டுமா கால் தவறி கீழே விழுந்திட போற, பார்க்க கஷ்டமா இருக்கு என்று பேசி இருக்கிறார்.
ஏஞ்சலுக்கு அது தர்ம சங்கடமாக இருந்தாலும் சிரித்து சமாளிக்கிறார்.
மேடையில் இது போல் தொகுப்பாளினிகளை ட்ரீட் பண்ணாமல் இருக்கலாம் என தற்போது இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.