Trisha: நடிகை திரிஷா கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பே பீல்ட் அவுட் ஆகி இருக்க வேண்டிய ஒருவர். 2022 ஆம் ஆண்டு த்ரிஷா வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டது என்ற தான் சொல்ல வேண்டும்.
பொன்னியின் செல்வன் படம் போட்ட பிள்ளையார் சுழி த்ரிஷாவின் கேரியரை தற்போது உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது.
திரிஷாவுக்கு அடுத்த வருடம் மட்டும் மொத்தம் ஆறு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. அந்த லிஸ்டை பார்க்கலாம்.
த்ரிஷா காட்டில் அதிர்ஷ்ட மழை தான்!
விடாமுயற்சி: ஜி, கிரீடம் படங்கள் வரிசையில் திரிஷா அஜித் குமாருடன் இணைந்திருக்கும் படம் தான் விடாமுயற்சி.
இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. துணிவுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் அஜித் படம் என்பதால் இதன் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
குட் பேட் அக்லி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் குட் பேட் அக்லி.
இந்த படத்தில் திரிஷாவும் இணைந்து இருக்கிறார். இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
தக் லைஃப்: நாயகன் படத்திற்கு பிறகு 33 வருடங்கள் கழித்து கமல் மற்றும் மணிரத்தினம் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
த்ரிஷா இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா 45: ஆர் ஜே பாலாஜி, சூர்யா என்னும் புதிய கூட்டணியில் கதாநாயகியாக இணைந்து இருக்கிறார் நடிகை திரிஷா. இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வம்பரா: நீண்ட வருடங்கள் கழித்து த்ரிஷா மீண்டும் தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் விஷ்வம்பரா படத்தில் திரிஷா ஹீரோயின் ஆக நடிக்கிறார்.
இந்த படம் அடுத்த வருடம் கோடையில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடென்டி: தெலுங்கு படத்தைப் போலவே த்ரிஷாவுக்கு அடுத்த வருடம் மலையாள சினிமா உலகிலும் ரீ என்ட்ரி இருக்கிறது.
டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் ஐடென்டி படத்தில் நடித்திருக்கிறார். அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும்.