அரசன் எப்பொழுது ஆண்டியாவான் என்பது அவரவர் நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. அப்படித்தான் கோடிகளில் புரண்ட ஒருவர் இன்று அனைத்தையும் இழந்து ஆண்டியாகியுள்ளார். 90களில் புகழின் உச்சத்தில் இருந்த அவருடைய வீடு, கார் என அனைத்தும் இன்று ஏலத்துக்கு வந்துள்ளது.
கிட்டத்தட்ட இந்திய அணிக்காக ஒன்பது வருடங்கள் கிரிக்கெட் விளையாடி உள்ளார். 90களிலேயே கோடீஸ்வரராக இருந்த அவர் இன்று அனைத்தையும் இழந்து உள்ளார். இதற்கு காரணம் அவருடைய குடிப்பழக்கம் தான். சச்சின், மஞ்சுரேகர் போன்ற மும்பையை சார்ந்த வீரர்களுக்கு நெருங்கிய நண்பர்.
1991 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டவர் வினோத் காம்ப்ளி. சச்சின் உடன் பள்ளிக்கூடத்தில் படித்தவர். இருவரும் ஒரே நேரத்தில் தான் இந்திய அணிக்காக தேர்வானார்கள். காம்ப்ளி 1993 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் தேர்வானார். தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து அணிக்கு எதிராக 227 ரன்கள் குவித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்த அவர் விளையாடிய 17 ஆட்டங்களில் சராசரியாக 54.20 ரண்களை பெற்றுள்ளார். இந்திய அணிக்காக சுமார் 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2477 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு செஞ்சுரிகளும் 14 அரை சதங்களும் அடங்கும்.
இன்று 52 வயதை எட்டி இருக்கும் வினோத் காம்ப்ளி 2000 ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். புகழின் உச்சத்தில் இருக்கும்போதே சாதாரண ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இப்படி வாழ்க்கையை ஓட்டி வந்த வினோத் காம்ப்ளி சுமார் இரண்டு கோடி மதிப்பிலான வீடு கட்டியுள்ளார். அதற்கு வங்கியில் லோன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்தாமல் இன்று 8 கோடி மதிப்பிலான அந்த சொத்து இடத்துக்கு வந்துள்ளது.