வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பிரபல ரியாலிட்டி ஷோவுக்கு முழுக்கு போடும் விஜய் டிவி.. வாங்குன அடி அப்படி!

Vijay TV: சோத்துலையும் அடி வாங்கியாச்சு, சேத்துலையும் அடி வாங்கியாச்சு என்ற கதையை ஆகிவிட்டது விஜய் டிவியின் நிலைமை.

ஒரு காலகட்டத்தில் முழுக்க முழுக்க சன் டிவி சீரியல்களை பார்க்கும் கூட்டம் மட்டுமே இருந்தது. அதை அப்படியே ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பக்கம் திருப்பியது விஜய் டிவி தான்.

சீரியல்களை நம்பாமல் முழுக்க முழுக்க பொழுது போக்குகளை நம்பி களம் இறங்கி வெற்றியும் கண்டது இந்த சேனல்.

ஆனால் அரைச்ச மாவையே அரைச்சு வாங்கிய மொத்த பேரையும் கெடுத்துக் கொண்டது. இப்போதைக்கு சச்சரவுகள், சண்டைகள் என வந்தால் தான் இந்த சேனலின் சில நிகழ்ச்சிகள் கொடி கட்டி பறக்கிறது.

முழுக்கு போடும் விஜய் டிவி

இருந்தாலும் மக்கள் பொழுது போக்கிற்காக நம்பி இருப்பது இந்த சேனலில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தான்.

இப்படி சில வருடங்களுக்கு முன்பு வரை உலக தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

வார இறுதியில் எபிசோடுகளை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் இதன் கிளிப்புகள் எல்லாம் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரலாகப்பட்டது.

ஆனால் சமீபத்தில் நடந்த ஐந்தாவது சீசன் அப்படியே தலைகீழாகி விட்டது. இந்த நிகழ்ச்சியை முதலில் தயாரித்த மீடியா மேசன் நிறுவனம் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்கள்.

இருந்தாலும் அவர்களுடைய கான்செப்ட் வைத்து ஐந்தாவது சீசனையும் விஜய் டிவி கொண்டு வந்தது. ஆனால் பெயர் சொல்லும் அளவுக்கு இந்த சீசனுக்கு வெற்றி இல்லை என்பது தான் உண்மை.

அதிலும் பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை இந்த நிகழ்ச்சிக்கு திருஷ்டி பொட்டாக அமைந்துவிட்டது.

அடுத்த குக் வித் கோமாளி சீசன் இருக்குமா என்பதே பலருடைய கேள்வியாக இருந்தது. சமீபத்தில் அதற்கான அப்டேட் தான் வந்திருக்கிறது.

விஜய் சேனல் விரைவில் இந்த நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறார்கள். ஆனால் வேறொரு பெயருடன் இருக்கப் போகிறது.

மீடியா மேசனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இந்தப் பெயர் வேண்டாம் என சேனல் தரவும் முடிவு எடுத்து இருக்கிறதாம். இதனால் விஜய் டிவியில் இனிமேல் குக் வித் கோமாளி இல்லை.

Trending News