ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

கழுவுற மீன்ல நழுவுற மீன் போல் சிட்டா பறந்த வெங்கட் பிரபு.. நம்பியிருந்த சிவகார்த்திகேயனுக்கு வந்த சறுக்கல்

கோட் படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படம் இயக்குவதாக இருந்தார். ஆனால் சிவாவோ ஏ ஆர் முருகதாஸ் படம், சுதா கொங்காராவின் புறநானூறு என அடுத்தடுத்து பல படங்களில் பிஸியாக இருப்பதால் வெங்கட் பிரபு ரூட்டை மாற்றிவிட்டார்.

பெரிய ஹீரோக்களுக்கு வலை வீசி வருகிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக அவர் அஜித் உடன் கூடிய விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் புக்கில் இவர் பெயர் இடம் பெற்று இருக்கிறது. இருவரும் தொலைபேசியில் மட்டும் அடிக்கடி பேசி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு கதையெல்லாம் ரெடி பண்ணி விட்டார் வெங்கட் பிரபு ,ஆனால் ஹீரோயின்கள் கால்ஷீட் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் படத்தை 2025 டிசம்பர் மாதம் தள்ளி வைத்துவிட்டு இப்பொழுது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார் வெங்கட்.

சிவகார்த்திகேயன் புறநானூறு ப்ராஜெக்டை முடிக்கும் எண்ணத்தில் இருக்கிறார். அதுவும் போக நண்பர் சிபி சக்கரவர்த்திக்கு ஒரு படம் அடுத்த சம்மரில் பண்ண போகிறார். இதனால் சிவகார்த்திகேயன் கால் சீட் கிடைத்தாலும் அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார்

இதனால் சற்று சுதாரித்துக் கொண்ட வெங்கட் பிரபு பாலிவுட்டில் அக்ஷய் குமார் உடன் கூட்டணி அமைக்க சென்று விட்டார். அவருக்காக ஒரு கதை சொல்லி கிரீன் சிக்னலும் வாங்கி விட்டார். கூடிய விரைவில் இவர்கள் இணையும் படம் தொடங்க இருக்கிறது.

Trending News